பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட குப்பைகள் -
பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்ட கழிவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் திருப்பி அனுப்பப்படவுள்ளன.
கழிப்பொருட்கள் அடங்கிய 98 கொள்கலன்களை மீளவும் அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இலங்கை சுங்க பிரிவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
மத்திய சுற்றுச் சூழல் அதிகார சபை கொழும்பு துறைமுகத்திற்கு சென்று அந்த கொள்கலன்களை சோதனையிட்ட பின்னர் இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அந்த கொள்கலன்களில் இருந்து பயன்படுத்தப்பட்ட பெருந்தொகை மெத்தை தொகை ஒன்று காணப்பட்டதாகவும், அது பாரிய அளவு சேதமடைநதுள்ளதாகவும், இது தொடர்பில் இலங்கை சுங்க பிரிவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பயன்படுத்திய மெத்தை வகைகள் இறக்குமதி செய்வதாக கூறப்பட்ட போதிலும், அதில் குப்பையாக மாறிய மெத்தையே காணப்பட்டுள்ளது.
இதனை மெத்தை என கூறிய போதிலும், அதனை குப்பை என்றே கூற வேண்டும் என சுற்று சூழல் அதிகார சபையின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட குப்பைகள் -
Reviewed by Author
on
July 13, 2019
Rating:

No comments:
Post a Comment