அண்மைய செய்திகள்

recent
-

மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் 150ஆண்டு நிறைவை முன்னிட்டு இசை மாலை-2019

நிறைவை முன்னிட்டு நடைபெறுகின்ற  விழாக்களில் ஒன்றாக பாடசாலை அபிவிருத்திக்கு நிதிசேகரிக்கும் வகையில் இலண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கின்ற பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் பங்குபற்றுதலோடு இசைமாலை எனும் இசை நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது,

இலங்கையின் வட பிராந்தியத்தில்  அமைந்திருக்கும் மன்னார் மாவட்டத்தில்  அமைந்திருக்கும் கல்லூரிகளில் மிக முக்கியமான கல்லூரியான புனித சவேரியார்  ஆண்கள் தேசிய கல்லூரியானது தனது 150வது ஆண்டினை கொண்டாடிக்கொண்டு இருக்கின்றது.
  இக்கல்லூரியானது பல வைத்தியர்கள் பொறியியலாளர்கள் ஆசிரியர்கள் திறமையான வர்களையும் கல்விமான்களையும் இனமத பேதமின்றி  கடந்த 150 ஆண்டுகளாக உருவாக்கி  இலங்கையின் புகழ்வாய்ந்த முதன்மையான  பாடசாலைகளில் ஒன்றாக விளங்குகின்றது.
புலம்பெயர்ந்து வாழும் எமது கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆதரவு வழங்கி வருவது பாராட்டுக்குரியது அந்த வகையில்  பிரித்தானியாவில்  உள்ள பழைய மாணவர்கள் சங்கம் ஆனது  காத்திரமான தனது பங்களிப்பை வழங்கும் முகமாக  எதிர்வரும் புரட்டாதி மாதம் 8ம் திகதி  மாலை 5- 30 மணியளவில்  இசை மாலை இசை நிகழ்வானது நடைபெறுகின்றது இவ்நிகழ்வு சிறப்பாக நடைபெற பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து வாழும் எமது கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து எமது முயற்சிக்கு ஆதரவு வழங்குவதோடு எமது கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.


இடம்- IMPIRIAL HOUSE  BANQUETING,31 IMPIRIAL WAY
CROYOON ,SURREY ERO 4RR
தொடர்புகளுக்கு 
தயாபரன்- 07760490019
சுதா-07853229901
சசி-07930923829



மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் 150ஆண்டு நிறைவை முன்னிட்டு இசை மாலை-2019 Reviewed by Author on August 27, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.