சமாதானம் மற்றும் நல்லிணகத்தை ஏற்படுத்த 2ம் கட்ட பயிற்சிப் பாசறை நிறைவு-படங்கள்
இன,மத,காலாசார நல்லிணக்கத்திற்கு எதிராக நாட்டில் நிலவும் முறுகல்நிலையைச் சீர்செய்யும் முகமாக தெரிவுசெய்யப்பட்ட 25 இளம் ஊடகவியலாளர்களுகான சமாதான ஊடகவியில் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் ஐந்து நாட்கள் நீர்கொழும்பில் இடம்பெற்றது.
இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் (SDJF) ஏற்பாடுசெய்த, இந்நிகழ்வின் ஆரம்பவிழாவில் மன்றத்தின் தவிசாளார்.பேரா.பத்மஸ்ரீ வனிகசுந்தர, திட்டப்பணிப்பாளர் சட்டத்தரணி ஜனாப். முஸ்தபா எம்.அஸாட், இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபன உதவிப்பணிப்பாளர் திரு. டி.எம்.ஜி. சந்திரசேகர மற்றும் IREX நிறுவன நிகழ்ச்சித்திட்ட அலுவலர் திரு.ஆர்.கனிஸ்க ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இத்திட்டம் ஐரெக்ஸ்(IREX), யுஎஸ்எய்ட்(USAID) ஆகிய நிறுவனங்களின் நிதிப்பங்களிப்புடனும் “ஜனநாயக இலங்கைக்கான ஊடகங்களை வலுப்படுத்தல்” (Media Empowerment for a Democratic Sri Lanka – MEND) எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக இரண்டாம் முறையாகவும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நாட்டில் வாழும் பல்லின சமூகங்களைக் கொண்ட மக்களின் வேறுபட்ட கலாசாரங்களையும் தனித்தன்மையையும் ஏற்றுக்கொள்வதுடன் அவர்கள் தங்கள் சுயத்தோடு வாழ சமாதான ஊடகவியலை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதும் அதன்மூலம் தேசியக்கலந்துரையாடல் ஒன்றை ஏற்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு ஊடக அறிக்கையிடலின் போது சாமாதானம் மற்றும் பால்நிலை சமத்துவத்தைப் பேணுவதற்கும் இன, மத முரண்பாட்டைத் தவிர்ப்பதற்கும் தொழில்நுட்ப ரீதியாக ஊடகவியலாளர்களின் திறன்களை அபிவிருத்தி செய்வதற்குமாக சமாதானம், பால்நிலை, மோதல், உணர்திறன் ஊடகவியல், ஊடக தர்மம், கதையுருவாக்கம், காட்சி மற்றும் கோணங்களின் வகைகள், தொடர்காட்சியுருவாக்கம், நேர்காணல், காட்சிப்படுத்தல் நுட்பங்கள் போன்ற செலயமர்வுகள் துறைசார்ந்த வல்லுனர்களான திருமதி.தர்சா பஸ்டியன் (ஆசிரியர் – சன்டே ஒப்சேவர்) திரு.சான்விஜயதுங்க (பணிப்பாளர்- இலங்கை ஊடகவியல் கல்லூரி), திரு.லசந்த றுகுனுகே ( உதவி ஆசிரியர் – அனித்தா பத்திரிகை), திரு.டி.எம்.ஜி.சந்திரசேகர –மேலதிக பணிப்பாளர் – இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம்) திருமதி.ராதிகா குணரட்ண (சட்டத்தரணி), திரு.கபில, திரு.ருவான் ராமநாயக்க, திரு.அஸ்வர் ஆகியோரால் பயிற்றுவிக்கப்பட்டன.
இத்திட்டத்தின் மூலம் சகோதர மொழி பேசும் ஊடகவியளார் ஒருவரின் வீட்டிற்குச் சென்று மற்றொரு ஊடகவியாளர் ஏழு நாட்கள் தங்கிருப்பதன் மூலம் குறுக்குச் காலாசார புரிந்துணர்வை ஊடகவியலாளர்களுக்கு மத்தியில் ஏற்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இதுகுறித்து திட்டப்பணிப்பாளர் திரு.அசாட் அவர்களோடு உரையாடுகையில் “ ஊடக அறிக்கையிடலின் போது சமாதானத்தையும் சமத்துவத்தையும் பேணுவதன் மூலமும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை இடம் பொருள் அறிந்து வெளிப்படுத்துவதன் மூலம் பெரும்பாலான அசம்பாவிதங்களைத் தவிர்க்க முடியும். அனைவரும் இலங்கையர் எனும் ஒரே சமத்துவத்தை ஏற்படுத்துவதன் பல்வேறு முரண்பாடுகளைத் தவிர்க்கமுடியும் எனத் தெரிவித்தார்.
-மன்னார் அமுதன்-

சமாதானம் மற்றும் நல்லிணகத்தை ஏற்படுத்த 2ம் கட்ட பயிற்சிப் பாசறை நிறைவு-படங்கள்
Reviewed by Author
on
August 30, 2019
Rating:

No comments:
Post a Comment