மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்-படம்
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமாகிய இன்று வெள்ளிக்கிழமை (30) மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
-மன்னார் மாவட்டச் சஅயலக்ததிற்கு முன் குறித்த போராட்டம் காலை 10 மணியளவில் ஆராம்பமானது.
2009ஆம் ஆண்டு இறுதி யுத்ததின் போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட தங்கள் உறவுகளுக்கு அரசாங்கம் யுத்தம் நிறைவடந்து பத்து வருடங்கள் கடந்த நிலையிலும் உரிய தீர்வு வழங்காத நிலையில் இந்த நல்லாட்சி அரசாங்கம் நிறைவடைவதற்குள் சர்வதேசத்தின் தலையீட்டுடன் நல்ல தீர்வு ஒன்றை வழங்க கோரியும் , பல வருடங்களாக சந்தேகத்தின் பெயரில் அரசியல் கைதிகளாக்கப்பட்ட தமிழ் இளைஞர்களையும் விடுவிக்க கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் மன்னார் மாவட்டம் முழுவதிலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர்கள், உறவினர்கள் அருட்தந்தையர்கள், மத குருக்கள் , சமூக ஆர்வளர்கள் , மன்னார் நகரசபை தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் உற்பட பலரும் கலந்து கொண்டனர்.
போரட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் நிலைமாறுகால நீதி எங்கே? இலங்கை அரசே உண்மையை மறைக்காதே ஒரு நாள் நிச்சையம் உண்மை வெளி வரும்,இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக அக்கறையில்லையா,
உறவுகள் காணாமல் போனவர்கள் அல்ல இவர்கள் இலங்கை இரானுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகள் மற்றும் வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களை தாங்கியவாறு கோசங்களையும் எழுப்பியவாரு கண்ணீருடன் போரட்டத்தில் கலந்து கொண்டனர்.போராட்டத்தின் பின் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மன்னார் நகர சபை மண்டபம் வரை ஊர்வலமாக சென்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்-படம்
Reviewed by Author
on
August 30, 2019
Rating:

No comments:
Post a Comment