74 ஆண்டுகளுக்கு பின் தலைநகரை மாற்றும் நாடு! அழிவை நெருங்கும் நகரம்..
ஜகார்த்தாவில் 3 கோடிக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். ஆனால், அந்நகரில் கடல் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால், அந்நகரின் மூன்றில் ஒரு பகுதி 2050 ஆண்டுவாக்கில் கடலில் மூழ்கும் என்று நிபுணர்கள் முன்னர் எச்சரிக்கை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, புதிய தலைநகரை தேர்ந்தெடுக்கும் பணியில் இந்தோனேசிய அரசு இறங்கியது. இந்நிலையில், உலகின் மூன்றாவது பெரிய தீவான போர்னியோவை புதிய தலைநகராக கட்டமைப்பதாக, இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ அறிவித்துள்ளார்.
இதன்மூலம் 10 ஆண்டுகளில் அங்கு புதிய தலைநகரம் கட்டமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் புதிய தலைநகருக்கு இன்னும் பெயர் தெரிவு செய்யப்படவில்லை.

மழைக்காடுகள் நிறைந்த போர்னியோ தீவு இந்தோனேசியா, மலேசியா மற்றும் புருனே ஆகிய நாடுகளின் ஆளுமையில் உள்ளது. எனினும், அந்த தீவின் பெரும் பகுதி இந்தோனேசியாவுக்கே சொந்தம் என்பதால், அந்நாட்டு அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
1949ஆம் ஆண்டு சுதந்திரமடைந்த இந்தோனேசியா, 74 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரை மாற்றுகிறது. புதிய தலைநகரை கட்டமைக்க சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
74 ஆண்டுகளுக்கு பின் தலைநகரை மாற்றும் நாடு! அழிவை நெருங்கும் நகரம்..
Reviewed by Author
on
August 27, 2019
Rating:
No comments:
Post a Comment