யாழ்.பலாலி விமான நிலையம் தொடர்பில் இன்று வெளியாகியுள்ள அறிவிப்பு -
யாழ். பலாலி விமான நிலையத்திலிருந்து இந்திய நகரங்களுக்கான விமான சேவைகள் ஒக்டோபர் 15ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
பலாலி விமான நிலையத்திலிருந்து சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஆகியோருக்கு இடையில் இன்று கலந்துரையாடப்பட்டுள்ளது.
அலரி மாளிகையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பலாலி விமானத்தளத்தின் விஸ்தரிப்பு மற்றும் பணிகள் மற்றும் தேவைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையத்துக்குத் தேவையான குடிநீர் வசதி இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, தேசிய நீர்வழங்கல் சபையின் குடிநீர் விநியோகம் விமான நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதாகவும், அதன் காரணமாக விமான நிலையத்துக்கு குடிநீர் விநியோக சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதற்குப் பதிலளித்துள்ள பிரதமர், கடற்படையினரைக் கொண்டு கடல்நீரை சுத்திகரிப்பு செய்து விமான நிலையத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதேநேரம் விமான நிலையத்தின் ஒரு பகுதியில் இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கான தொழிநுட்ப சேவைகளை வழங்கும் சேவை நிலையம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
யாழ்.பலாலி விமான நிலையம் தொடர்பில் இன்று வெளியாகியுள்ள அறிவிப்பு -
Reviewed by Author
on
August 26, 2019
Rating:

No comments:
Post a Comment