வெளிவாரி பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க தீர்மானம்: சி.வி.கே.சிவஞானம் -
வெளிவாரி பட்டதாரிகள் மற்றும் உயர் தேசிய கணக்கியல் டிப்பிளோமாதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
பட்டதாரி நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட வெளிவாரி பட்டதாரிகள் இன்று சி.வி.கே.சிவஞானத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, பட்டதாரி நியமனத்தில் தாம் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கப்படவில்லை என வெளிவாரி பட்டதாரிகள் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையிலையே சி.வி.கே.சிவஞானம் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
அண்மையில் நாடளாவிய ரீதியில் வழங்கப்பட்ட பட்டதாரி நியமனங்களில் உள்வாரி பட்டதாரிகளுக்கு மட்டும் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. எனினும், வெளிவாரி மற்றும் உயர் தேசிய கணக்கியல் டிப்பிளோமாதாரிகள் நியமனங்கள் வழங்கப்படாது புறக்கணிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவில் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.
உள்வாரி வெளிவாரி என்ற பாகுபாடின்றி அனைத்து பட்டதாரிகள் மற்றும் உயர் தேசிய கணக்கியல் டிப்பிளோமாதாரிகள் அனைவருக்கும் நியமனங்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் குறித்த விடயம் தொடர்பிலான தொடர் நடவடிக்கைகளை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிவாரி பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க தீர்மானம்: சி.வி.கே.சிவஞானம் -
Reviewed by Author
on
August 08, 2019
Rating:

No comments:
Post a Comment