ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு ஓர் எச்சரிக்கை -
தமிழர்கள் அதிகமாக புலம்பெயர்ந்து வாழும் ஐரோப்பிய நாடுகளில் பெரியம்மை தொற்று நோய் பரவ ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளான அல்பேனியா, செக் குடியரசு, கிரீஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் பெரியம்மை நோய் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெரியம்மை நோயானது தொற்றினால் பரவும் மிகவும் ஆபத்தான நோயெனவும்,இதன் காரணமாக இருமல்,காய்ச்சல் என்பன ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நோயினை எம்.எம்.ஆர் தடுப்பூசி மூலம் தடுக்க முடியுமெனவும்,பிரித்தானியாவிலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் குறித்த தடுப்பூசி இலவசமாக இடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு ஓர் எச்சரிக்கை -
Reviewed by Author
on
August 30, 2019
Rating:

No comments:
Post a Comment