யாழ்ப்பாண கடலுக்குள் சிக்கிய மர்மம்!
யாழ்ப்பாணத்தில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள வைத்தியரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய மேலும் சில வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண கடற்கரை பிரதேசத்தில் வைத்து வெடிபொருட்கள் அடங்கிய பொதியை, பொலிஸ் பயங்கரவாத விசாரணை பிரிவு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
பொலிஸ் பயங்கரவாத விசாரணை பிரிவின் அதிகாரிகளால் குறித்த வைத்தியரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைய இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
வெடிபொருட்கள் அடங்கிய 7 சிறிய பைகள் கடலில் கற்களுக்கு அருகில் நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது.
இந்த வெடி பொருட்கள் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எனினும் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் யாழ். குடாநாட்டில் பதற்ற நிலையை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்ட வகையில் இவ்வாறான செயற்பாடுகளை தென்னிலங்கை சக்தி ஒன்று முன்னெடுத்து வருவதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண கடலுக்குள் சிக்கிய மர்மம்!
Reviewed by Author
on
August 29, 2019
Rating:

No comments:
Post a Comment