யாழ். வல்லிபுர ஆழ்வார் கோயில் இராஜகோபுரத்தில் மகாத்மா காந்தி சிலை -
யாழ். வடமராட்சி பருத்தித்துறையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோயில் இராஜகோபுரத்தில், விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை எனப்போற்றப்படும் மகாத்மா காந்தியின் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 1869ம் ஆண்டு அக்டோபர் 2ம் திகதி இந்திய குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் காந்தி பிறந்தார்.
மகாத்மா காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார். அந்த வகையில், 1924ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தலைமையேற்றவுடன் காங்கிரசில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார். அறப்போராட்ட வழிமுறைகளையும் சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார்.
காந்தியில் பல போராட்டங்களின் முடிவில் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது. 1948ம் ஆண்டு, ஜனவரி 30ம் திகதி டில்லி பிர்லா மாளிகையில் வைத்து நாதுராம் கோட்ஸே என்பவரால சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இவ்வாறு புகழ்பெற்ற மகாத்மா காந்திக்கு யாழ். வடமராட்சி பருத்தித்துறையில் அமைந்துள்ள ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோயில் இராஜகோபுரத்தில், சிலை வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். வல்லிபுர ஆழ்வார் கோயில் இராஜகோபுரத்தில் மகாத்மா காந்தி சிலை -
Reviewed by Author
on
August 31, 2019
Rating:

No comments:
Post a Comment