அண்மைய செய்திகள்

recent
-

எவ்விதமான பிரச்சினைகள் வந்தாலும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டியது தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் கடமை-சாள்ஸ் நிர்மலநாதன்MP......

தனியார் போக்குவரத்துச் சங்கம் பல்வேறு அரசியல் ரீதியான ஒரு நெருக்கடிக்கு உள்ளாகுவது வழமை. குறித்த நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய நிலைப்பாடு உள்ளது.என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் புதிய நிர்வாகத்தின் கையேற்பும் கன்னி அமர்வும் இன்று சனிக்கிழமை(31) காலை 10 மணியளவில் மன்னார் தனியார் ஹோட்டலில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், இலங்கை வட பிராந்திய போக்குவரத்துச் சபையின் செயலாற்று அதிகாரி லெம்பேட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,,

மன்னார் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினுடைய நிர்வாக கட்டமைப்பு இன்று புதிய நிர்வாகத்திடம் கைமாறியுள்ளது.பழைய நிர்வாகத்தில் இருந்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

தனியார் பேரூந்து சங்கத்திற்கும் இலங்கை அரச பேரூந்து சங்கத்திற்கும் இடையில் நீண்ட காலமாக சின்னச் சின்ன பிரச்சினைகள் காணப்படுகின்றது.

குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் அதிகமாக இருக்கின்றது. வடமாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை வட பிராந்திய போக்குவரத்துச் சபையின் செயலாற்று அதிகாரி அவர்கள் எதிர் வரும் காலங்களில் இவ்வாரான முறன்பாடுகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.எல்லோறும் வட மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அனைவருமே மக்களுக்காக சேவை செய்கின்றவர்கள்.எனவே சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் பேச்சுவார்த்தை மூலம் ஓர் இனக்கப்பாட்டுடன் செயலாற்ற வேண்டும்.

தனியார் போக்குவரத்துச் சங்கம் பல்வேறு அரசியல் ரீதியான ஒரு நெருக்கடிக்கு உள்ளாகுவது வழமை. குறித்த நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய நிலை உள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நிழ்வில் மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் புதிய தலைவர் ரீ.ரமேஸ் உற்பட நிர்வாக உறுப்பினர்கள், அழைக்கப்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

எவ்விதமான பிரச்சினைகள் வந்தாலும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டியது தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் கடமை-சாள்ஸ் நிர்மலநாதன்MP...... Reviewed by Author on August 31, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.