தலைமன்னார் கொழும்புக்கான ரயில் சேவையின் மாற்றத்தால் மன்னார் பிரயாணிகளுக்கு அசெளரியம்
தலைமன்னார் கொழும்பு ரயில் சேவைகளின் மாற்றத்தால் மன்னார் பிரயாணிகள் அசெளரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்டாம் திகதி 02.08.2019) தொடக்கம் தலைமன்னார் துறை கொழும்பு ரயில் நேரடி போக்குவரத்து சேவை இடை நிருத்தப்பட்ட நிலையில் யாழ் ரயில் இணைப்பு சேவையாக இடம்பெற தொடங்கியுள்ளன
நீண்ட காலமாக இடம்பெற்று வந்த தலைமன்னார் துறை கொழும்பு ரயில் சேவையானது கடந்த இரண்டாம் திகதி தொடக்கம் இவ் சேவையானது இடை நிருத்தப்பட்ட நிலையில் தற்பொழுது இவ் சேவையானது பயண ரயில் பெட்டிகள் வெகுவாக குறைக்கப்பட்ட நிலையில் மூன்று பயண பெட்டிகளுடன் மட்டும் அனுராதபுரம் வரைக்கும் இவ் சேவை நடைபெறுகின்றது
இவ்வாறு கொழும்பிலிருந்து மன்னார் மாவட்டத்துக்கு செல்லும் பிரயாணிகள் மன்னார் பகுதிக்கு என ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டிகளில் பயணிக்க ஒழுங்குகள் செய்திருப்பதுடன் இவைகள் யாழ் ரயிலுடன் இணைக்கப்பட்டு அனுராதபுரத்தில் இவ் பயணப் பெட்டிகள் கழற்றி விடப்படும்
பின் அனுராதப்புரம் ரயில்வே நிலையத்திலிருந்து இவ் பிரயாணிகளை கொண்ட பெட்டிகளுடன் தலைமன்னார் துறைக்கு ரயில் போக்குவரத்து சேவை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் தலைமன்னார் கொழும்புக்கான ரயில் சேவையின் நேரசூசியிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன
தலைமன்னாரிலிருந்து காலை மற்றும் இரவு சேவையானது ஏழு மணிக்கு இடம் பெறுகிறது.
இவ் தலைமன்னார் துறை கொழும்பு ரயில் சேவை மாற்றத்தால் தலைமன்னார் மன்னார் ரயில் நிலையங்களில் ஆசனங்கள் பதிவு செய்ய முடியாத நிலையும் அத்துடன் உறங்கு ஆசனத்தில் பிரயாணம் செய்ய முடியாத நிலையும் இருப்பதாக மன்னார் பிரயாணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

Reviewed by Author
on
August 05, 2019
Rating:

No comments:
Post a Comment