வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் அமைப்பின் தலைவி மீது தாக்குதல் -
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் அமைப்பின் தலைவியும், எட்டு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் அமைப்பின் உப தலைவியுமான அமலநாயகி அமல்ராஜும், அவரது மகளும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
கரடியனாறில் மரணச்சடங்கொன்றில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த, துணைக்குழு என அடையாளப்படுத்தப்பட்டவர்களால் மோதி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
காயமடைந்த தாயும், மகளும் சிகிச்சைகளுக்காக கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இளைஞர்களின் வலியுறுத்தலின் பெயரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் அமைப்பின் தலைவி மீது தாக்குதல் -
Reviewed by Author
on
August 05, 2019
Rating:

No comments:
Post a Comment