உனக்கு நான் யார் ??? என்று மிக விரைவில் காட்டுவேன். MP சாள்ஸ் நிர்மலநாதனை எச்சரித்த அமைச்சர் றிஸாட் பதியுதீன்-படம்
என் மீது நீ தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை வைத்துக்கொண்டு இருக்கின்றீர். உனக்கு நான் யார் என்று மிக விரைவில் காட்டுவேன்.என தன்னை அமைச்சர் றிஸாட் பதியுதீன் எச்சரித்ததாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
-மன்னாரில் இன்று திங்கட்கிழமை மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் மாவட்டத்திற்கு விவசாய அமைச்சர் பி.ஹரீசன் வருகை தந்திருந்தார். எனது கோரிக்கைக்கு அமைவாக கட்டுக்கரை குளத்திற்கு 300 மில்லியன் ரூபாய் 2019 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
குறித்த நிதியில் 40 சிறிய குளங்கள் புனரமைப்பு செய்வதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வை ஆரம்பித்து வைப்பதற்காக அமைச்சர் அவர்கள் எனது கோரிக்கையின் அடிப்படையில் மன்னாரிற்கு வருவதாக வாக்குறுதி வழங்கி இருந்தார்.
அதன் அடிப்படையில் இன்று திங்கட்கிழமை (26) காலை 10 மணியளவில் குறித்த நிகழ்வு நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அச்சங்குளம் கிராமத்தில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வு இடம் பெற்ற முடிந்ததன் பின்னர் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மறிச்சிக்கட்டி கமநல சேவை திணைக்களமும் உயிலங்குளம் கமநல சேவை திணைக்களத்தின் புதிய கட்டிடம் திறக்கும் நிகழ்வும் இடம் பெற்றது.
எனக்கு கிடைக்கப் பெற்ற அழைப்பிற்கு அமையவும் விவசாய அமைச்சர் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார் என்பதற்காகவும் நான் உயிலங்குளம் கமநல சேவை திணைக்களத்தின் புதிய கட்டிடம் திறக்கும் நிகழ்விற்கு சென்றிருந்தேன்.
விவசாய அமைச்சர் பி.ஹரீசன் குறித்த நிகழ்விற்கு வருகை தருவதற்கு முன்னர் நான் அங்கே சென்று விட்டேன்.ஆனால் அமைச்சர் றிஸாட் பதியுதீன் தான் குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினர் என பல தடவைகள் கட்சி ரீதியான ஒரு நிகழ்வு போல் அறிவிக்கப்பட்டது.
நான் உடனடியாக கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளரிடம் கேட்டிருந்தேன் குறித்த நிகழ்வினுடைய பிரதம விருந்தினர் யார்? என்று.அவர் கூறினார் விவசாய அமைச்சர் பி.ஹரீசன் என்று.
ஆனால் தொடர்ச்சியாக தொடர்ச்சியாக அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்களையே குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினர் என பல தடவைகள் தொடர்ச்சியாக அறிவித்துக் கொண்டு இருக்கின்றார்கள் என தெரிவித்தேன். பின்னர் நான் பின் பகுதியிலே இருந்தேன்.
வருகை தந்த விவசாய அமைச்சர் பி.ஹரீசன் அவர்கள் சகல விடையங்களுக்கும் என்னையே அழைத்தார். தனக்கு அருகில் வருமாறு கூறினார். பின்பே குறித்த நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.
குறித்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு முடித்து வைத்ததன் பிற்பாடு தேனீர் விருந்து இடம் பெற்றது.
கமநல சேவைகள் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் உள்ள அறை ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் போது தேனீர் விருந்து உபசாரத்தின் போது விவசாய அமைச்சர் பி.ஹரீசன் அவர்களிடம் நான் சொல்லி இருந்தேன் அமைச்சர் அவர்களே நீங்கள் பிரதம விருந்தினராக கலந்து கொள்ள உள்ளீர்கள் என்பதன் காரணத்தினாலேயே நான் இங்கு வந்தேன்.
ஆனால் அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்கள் குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினர் என அறிவித்துக் கொண்டு இருக்கின்றார்கள் என எதேர்ச்சியாக அவரிடம் கூறி இருந்தேன்.
விவசாய அமைச்சர் பி.ஹரீசனுக்கு அருகில் அமைச்சர் றிஸாட் பதியுதீன் அமர்ந்திருந்தார். அமைச்சர் றிஸாட் பதியுதீன் ஒரு பதட்டத்துடன் காணப்பட்டதோடு, தரமற்ற வார்த்தை பிரையோகத்தை தொடர்ச்சியாக முன் வைத்தார்.
-மக்களினால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதி நிதி என்ற மன நிலை இல்லாமல் நீ,நான் என்ற வார்த்தை பிரையோகத்தை முன் வைத்தார்.
-பிரதம விருந்தினராக யாரை அறிவித்தாலும் உனக்கு என்ன? நீ சத்தம் இல்லாமல் இரு என்று அதிகாரத் தொணியில் அவருடைய வார்த்தை பிரையோகம் இருந்தது.
-என் மீது நீ தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை வைத்துக்கொண்டு இருக்கின்றீர்.உனக்கு நான் யார் என்று மிக விரைவில் காட்டுவேன்.என அதிகார தொணியில் பயமுறுத்துகின்ற ஒரு தொணியில் அவருடைய வார்த்தை பிரையோகம் காணப்பட்டது.
அதற்கு நான் கூறினேன் நான் யாருக்கும் பயப்பிட மாட்டேன் , யாருக்கும் பயப்பிட வேண்டிய அவசியம் எனக்க இல்லை என மிக தாழ்மையாக கூறினேன்.
மன்னாருக்கு வருகை தந்த அமைச்சர் பி.ஹரீசனுக்கு நன்றி தெரிவித்து விட்டு நான் அங்கிருந்து சென்று விட்டேன்.எனினும் அப்பிரதேசத்தைச் சேர்ந்த அதிகளவான விவசாயிகள், விவசாய அமைப்புக்களின் பிரதி நிதிகள் என்னிடம் வந்து குறித்த நிகழ்வில் கட்டாயம் முழுமையாக கலந்து கொள்ள வேண்டுகோள் விடுத்தனர்.
-அவர்களின் வேண்டு கோளுக்கு அமைய குறித்த நிகழ்வில் கலந்து கொண்டேன்.
-அமைச்சர் றிஸாட் பதியுதீன் தான் ஒரு சர்வதிகாரி போன்று தனக்கு கீழ் எல்லோரும் இருக்க வேண்டும் என நடந்து கொள்ள முயற்சிக்கின்றார் என அவருடைய வார்த்தை பிரையோகங்களில் தெரிகின்றது.
-குறித்த நிகழ்விற்கான நிகழ்ச்சி நிரலில் விருந்தினர்கள் உரையில் எனது பெயரும் காணப்பட்டது.குறித்த பிரச்சினையின் பிற்பாடு விவசாய அமைச்சரிடம் அமைச்சர் றிஸாட் கூறியதற்கு அமைவாக எனக்கு உரை நிகழ்த்த அனுமதி வழங்கப்படவில்லை.எனினும் விவசாய அமைச்சர் பி.ஹரீசன் மாத்திரமே உரை நிகழ்தினார் என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மேலும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வுகளுக்கு கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உனக்கு நான் யார் ??? என்று மிக விரைவில் காட்டுவேன். MP சாள்ஸ் நிர்மலநாதனை எச்சரித்த அமைச்சர் றிஸாட் பதியுதீன்-படம்
Reviewed by Author
on
August 26, 2019
Rating:

No comments:
Post a Comment