புவியின் நுரையீரல் எரிந்துகொண்டிருக்கிறது!-PHOTOS
அமேசான் காடுகளின் கால்பங்கு நிலம் எரிந்து சாம்பலாகிவிட்டது. மீதம் இன்னும் எரிந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு நிமிடமும் ஒரு கால்பந்து மைதானம் அளவிலான காடுகளும், மரங்களும் உயிர்களும் கடந்த இரண்டு வாரங்களாக எரிந்துகொண்டிருக்கின்றன!
இந்த செய்தி தெரியவே 18 நாட்கள் ஆகியிருக்கிறது. வேற்று கிரகத்தை வேடிக்கைப் பார்க்க செயற்கைக்கோள்களை ஏவும் இந்த அதிமேதாவிகளுக்கு நம் கிரகத்தில் நடந்தகொண்டிருக்கும் பேரழிவை கண்டுபிடிக்கக்கூட முடியவில்லை. நாம் சுவாசிக்கும் உயிர்காற்றின் 20 சதவிகிதத்தை அந்த காடுகள்தான் வழங்குகின்றன என்று கண்டுபிடித்து என்ன சாதித்துவிட்டோம்? அதை காப்பாற்ற என்ன செய்ய முடிந்தது? உலக மேதாவி தொழில்நுட்பவாதிகளுக்குக் காட்டுத் தீயை அணைக்கக்கூட துப்பில்லையே. இந்த லயக்கற்ற தொழில்நுட்பங்களை நோக்கித்தான் வளர்ச்சிக்காக வாய்பிளந்துகொண்டிருக்கிறோம்.
ப்ரேசிலின் அதிபர் பொல்சனாரூ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தகவல்கள் பொய் என்கிறார். இங்கே அதிசிறந்த தொழில்நுட்பம் இருந்து என்ன கிழித்தோம்? அறிவியல் எந்த அதிகாரத்தின் கையில் இருக்கிறது என்பதை சீர்செய்யமுடியாமல் வெறும் தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யமுடியும்?
புவியின் நுரையீரல் எரிந்துகொண்டிருக்கிறது!-PHOTOS
Reviewed by NEWMANNAR
on
August 23, 2019
Rating:

No comments:
Post a Comment