மன்னார் சாந்திபுரம் - எமில் நகர் பிரதான பாதையில் காணப்படும் கட்டுமானக் கழிவுகளை அகற்றுமாறு மக்கள் கோரிக்கை-Photos
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சாந்திபுரம் - எமில் நகர் பிரதான பாதையில் புதிய பாலம் அமைப்பதற்காக உடைக்கப்பட்ட பழைய பாலத்தின் கட்டுமான கழிவுகள் மற்றும் கொங்கிரீட் கழிவுகள் குறித்த கிராமத்தில் மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் பல வருடங்களுக்கு முன்பாக கொட்டப்பட்டது.
இருந்தும் குறித்த புதிய பாலத்திற்கான கட்டுமான வேலைகள் நிறைவடைந்து பல வருடங்கள் ஆகியும் கொங்கிறீட் மற்றும் கட்டுமானக் கழிவுகள் இது வரை அகற்றப்படவில்லை .
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குறித்த கழிவுகளை அகற்றித் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கட்டுமான கழிவுகள் உட்பட பாரிய அளவு கொங்கிரீட் கட்டுமான தூண்கள் அகற்றப்படாமல் கிடப்பதால் குறித்த பகுதியில் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொள்வதாக தெரிவித்தள்ளனர்.
கொங்கிறீட் கழிவுகள் மற்றும் கட்டுமானக் கழிவுகள் கொட்டப்பட்ட பகுதியில் பாரிய முட் புதர்கள் காணப்படுவதனால் பாம்புகள் போன்ற விலங்குகளும் கட்டுமான கழிவுகள் கொட்டப்பட்ட பகுதிகளில் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில் கட்டுமான கழிவுகள் கொட்டப்பட்ட பகுதிகளில் மக்கள் குப்பைகளை கொட்டுவதாலும் காற்றின் காரணமாக குப்பைகள் தேங்குவதாலும் குறித்த பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் தேங்கி காணப்படுவதனால் மழை காலங்களில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பைகலில் நீர் தேங்கி டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த கொங்கிறீட் மற்றும் கட்டுமானக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் சாந்திபுரம் - எமில் நகர் பிரதான பாதையில் காணப்படும் கட்டுமானக் கழிவுகளை அகற்றுமாறு மக்கள் கோரிக்கை-Photos
Reviewed by NEWMANNAR
on
August 22, 2019
Rating:

No comments:
Post a Comment