மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா-Photos
ஜனாதிபதியின் எண்ணக்கருவில் வடக்கு மாகாண ஆளுநரின் நெறிப்படுத்தலில் வட மாகாண பண்பாட்டாலுவல்கள் திணைக்களமும் கல்வி அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த திருக்குறள் பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை (25) காலை 10 மணியளவில் மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் இடம் பெற்றது குறித்த விழாவிற்கு பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் கலந்து கொண்டார்.
காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து பவணி ஆரம்பமாகி மன்னார்-அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையை சென்றடைந்தது.
அதனைத் தொடர்ந்து நிகழ்வுகள் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சீ.ஏ.மோகன்றாஸ் ,செந்தமிழருவி மஹா தர்மகுமாரக் குருக்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மொழியியற்துறை விரிவுரையாளர் விஐயபாஸ்கரன் , யப்பான் கச்சுயின் பல்கலைக்கழகம் முன்னாள் ஆய்வுப் பேராசிரியர் முனைவர் மனோன் மணி சண்முகதாஸ், மன்னார் தமிழ் சங்கம் வண பிதா தமிழ்நேசன் அடிகளார் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
குறித்த நிகழ்வில் கலைஞர்கள்,பிரதேச செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள் மாணவர்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
மன்னார் நிருபர்
(25-08-2019)

Reviewed by NEWMANNAR
on
August 25, 2019
Rating:
No comments:
Post a Comment