மன்னாரில் தொடர் மின் தடங்கள்- அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கவனத்திற்கு கொண்டு சென்ற வன்னிMP-(படம்)
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மின் தடங்கள் ஏற்பட்டு வருகின்றமை தொடர்பிலும், தற்போது உயர் தர பரிட்சை இடம் பெற்று வருகின்ற நிலையில் மின்சாரம் அடிக்கடி தடைப்படுவதினால் பரீட்சை எழுதும் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில்,குறித்த மின் தடை தொடர்பாக அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் மாவட்டத்தில் தற்போது தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்ற மின் தடை தொடர்பில் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.
குறிப்பாக வருடா வருடம் உயர் தர பரீட்சை ஆரம்பிக்கின்ற போது மன்னார் மாவட்டத்தில் இரவு பகல் பாராது தொடர்ச்சியாக மின் தடை ஏற்படுகின்றது.
இதனால் பரீட்சை எழுதுகின்ற மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
தொடர்ச்சியாக இவ்வாறு மின் தடைப்படுவது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே மன்னார் மாவட்டத்தில் தற்போது தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்ற மின் தடங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தேன்.
வேண்டுகோளுக்கு அமைவாக உரிய நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளுவதாக அமைச்சர் உறுதி வழங்கினார் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் மாவட்டத்தில் தற்போது தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்ற மின் தடை தொடர்பில் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.
குறிப்பாக வருடா வருடம் உயர் தர பரீட்சை ஆரம்பிக்கின்ற போது மன்னார் மாவட்டத்தில் இரவு பகல் பாராது தொடர்ச்சியாக மின் தடை ஏற்படுகின்றது.
இதனால் பரீட்சை எழுதுகின்ற மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
தொடர்ச்சியாக இவ்வாறு மின் தடைப்படுவது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே மன்னார் மாவட்டத்தில் தற்போது தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்ற மின் தடங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தேன்.
வேண்டுகோளுக்கு அமைவாக உரிய நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளுவதாக அமைச்சர் உறுதி வழங்கினார் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.
மன்னாரில் தொடர் மின் தடங்கள்- அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கவனத்திற்கு கொண்டு சென்ற வன்னிMP-(படம்)
Reviewed by Author
on
August 08, 2019
Rating:

No comments:
Post a Comment