மன்னாரில் திருக்குறள் பெருவிழா
ஐனாதிபதியின் எண்ணக் கருவில் வடக்கு மாகாண ஆளுனரின் நெறிப்படுத்தலின் கீழ்
திருக்குறள் பெருவிழா வடக்கு மாகாணத்தின் மூன்றாவது நாள் நிகழ்வு மன்னாரில் மன்.அல்அஸ்ஹர் தேசிய பாடசாலை மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (25.08.2019) காலை 10 மணிக்கு நடைபெற இருக்கின்றது.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பின் கீழ் இவ் பெருவிழா நடைபெற இருக்கின்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சீ.ஏ.மோகன்றாஸ் தலைமையில் நடைபெறும்.இவ் விழாவுக்கு பிரதம அதிதியாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் கலந்து கொள்கின்றார்.
இவ் விழாவில் தலைமை மற்றும் இணைத்தலைமை உரைகளை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சீ.ஏ.மோகன்றாஸ் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மொழியியற்துறை விரிவுரையாளர் விஐயபாஸ்கரன் ஆகியோர் உரையாற்ற இருப்பதுடன், சிறப்புரைகளை யப்பான் கச்சுயின் பல்கலைக்கழகம் முன்னாள் ஆய்வுப் பேராசிரியர் முனைவர் மனோன் மணி சண்முகதாஸ், மன்னார் தமிழ் சங்கம் வண பிதா தமிழ்நேசன் அடிகளார் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.
அத்துடன் இவ் நிகழ்வில் மாணவர் உரை, திருக்குறள் கலையரங்கம் கலை
நிகழ்வுகள் ஆகியனவும் இடம்பெறும்.
மன்னார் நிருபர்
(23-08-2019)

Reviewed by NEWMANNAR
on
August 23, 2019
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 23, 2019
Rating:

No comments:
Post a Comment