காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த விவகாரம்.. இந்தியா எங்களிடம் தகவல் தெரிவிக்கவில்லை! அமெரிக்கா -
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ-வை இந்தியா ரத்து செய்தது, உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது.
இதனைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் விவகாரம் குறித்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவுக்கு தகவல் தெரிவித்துள்ளதாக தி பிரிண்ட் செய்தி வலைத்தளம் செய்தி வெளியிட்டது.
இந்நிலையில், இந்த செய்தியை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்வது குறித்து இந்தியா தங்களிடம் தகவல் தெரிவிக்கவில்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக State_SCA தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘பத்திரிகை அறிக்கைக்கு மாறாக, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அரசியலமைப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் முன் இந்திய அரசு, அமெரிக்க அரசாங்கத்துடன் கலந்தாலோசிக்கவோ அல்லது தெரிவிக்கவோ இல்லை’ என தெரிவித்துள்ளது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த விவகாரம்.. இந்தியா எங்களிடம் தகவல் தெரிவிக்கவில்லை! அமெரிக்கா -
Reviewed by Author
on
August 08, 2019
Rating:

No comments:
Post a Comment