மன்னார் மாவட்ட விவசாய வளங்களை பாதுகாத்துக் கொள்ளுதல் தொடர்பில் விவசாயிகளுக்கான ஒன்று கூடல்-
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில்(MSEDO) அதன் குழு தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில்
மன்னார் மாவட்ட விவசாயிகளை ஒன்றிணைத்து உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கான இயற்கை வளங்களை இணைத்து பாதுகாப்போம் என்னும் தொனிப்பொருளில் விவசாயிகள் ஒன்றுகூடல் மற்றும் விவசாயிகளுக்கான 10000 விதைகள் கையளிக்கும் நிகழ்வு நானாட்டான் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் சுமார் 400ற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மன்னார் மாவட்ட விவசாய வளங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளுதல் , எமது வளங்களின் தனித்துவமான சிறப்புக்களை அறிந்து கொள்ளுதல் , நிலத்தடி நீரைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புனர்வு செயற்பாடுகள் கருத்துரைகள் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் நுண்கடண் தொடர்பான விழிப்புனர்வை ஏற்படுத்தும் வீதி நாடகமும் காண்பிக்கப்பட்டதுடன் பனை வேம்பு முருங்கை இலுப்பை உட்பட 10ஆயிரம் பலன் தரும் விதைகளும் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் விவசாய பெண்கள் அமைப்பினரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
September 26, 2019
Rating:

No comments:
Post a Comment