மன்னார்-உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு மன்னாரில் விளையாட்டுப் போட்டிகள்-படங்கள்
உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்திலுள்ள 8 தபாலகமும் 38 உப தபலாக தபால் அதிபர்கள் மற்றும் இவ் அலுவலகங்களில் கடமைபுரியும் ஊழியர்களும் ஒரே குடும்பமாக ஒன்றினைந்து நான்கு அணிகளாகப் பிரிக்கப்பட்டு கடந்த மூன்று தினங்களாக மன்னார் பிரதான தபால் அதிபர் அந்தனிப்பிள்ளை சத்தியசீலன் தலைமையில் நடாத்திய விளையாட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை (15.09.2019) மன்னாரில் நடை பெற்ற இறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய அணிகளுக்கான பிரிசில்கள் வழங்கும் வைபவம் இடம்பெற்றது.
இவ் இறுதி நிகழ்வுக்கு மன்னார் பிராந்திய தபால் அத்தியட்சகர்
ஜயதிலக மற்றும் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசியப்
பாடசாலை அதிபர் அருட்சகோதரர் ரெஜினோல்ட் (டிலாசால் சபை) ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இவ் தினத்தை முன்னிட்டு பலவித விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றதுடன் குறிப்பாக நெய்தல் கொம்பன், குறிஞ்சி குறும்பள், மருதம் மாயன், முல்லை மூர்க்கள் ஆகிய நான்கு அணிகளுக்கிடையே இடம்பெற்ற கிரிக்கட் மற்றும் உதைபந்தாட்டப் போட்டிகளில் நெய்தல் கொம்பன் மற்றும் குறிஞ்சி குறும்பள் ஆகிய இரு அணிகள் மோதியதில் நெய்தல் கொம்பன் அணி வெற்றியீட்டியுள்ளது.
உதைபந்தாட்டப் போட்டியில் நெய்தல் கொம்பன் முல்லை மூர்க்கள் ஆகிய இரு அணிகள் மோதியதில் நெய்தல் கொம்பன் 2-0 என்ற கோல்களால்
வெற்றியீட்டியுள்ளது.

மன்னார்-உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு மன்னாரில் விளையாட்டுப் போட்டிகள்-படங்கள்
Reviewed by Author
on
September 17, 2019
Rating:

No comments:
Post a Comment