பிரித்தானிய பிரதமர் மாளிகையில் இருந்து தங்ககழிவறை திருட்டு: திணறும் பொலிசார் -
பிரித்தானிய முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பிறந்த Blenheim மாளிகையில் தங்க டாய்லெட் இரு தினங்களுக்கு முன்பு வைக்கப்பட்டது.
அதன்மதிப்பு 5 மில்லியன் பவுண்ட். இத்தாலிய கலைஞர் மௌரிஸோ கட்டெலன் இந்தத் தங்க டாய்லெட்டை வடிவமைத்திருந்தார்.
இதற்கு முன்பாக நியூயார்க்கின் Guggenheim அருங்காட்சியத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், Blenheim மாளிகையில் வைக்கப்பட்டிருந்த தங்க டாய்லெட் திருட்டுப் போயுள்ளது.

டாய்லெட் திருட்டு தொடர்பாக லண்டன் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறைந்தபட்சம் இரண்டு வாகனங்களில் இந்த டாய்லெட்டை திருடர்கள் திருடிக் கொண்டு போய் இருக்கலாம் என்று பொலிசார் கூறியுள்ளனர்.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் 66 வயதான நபர் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆனால் தங்க கழிவறையானது இன்னும் மீட்கப்படவில்லை. இதேவேளை, திருடர்கள் அந்த கழிவறையை சிதைத்திருக்க வாய்ப்புள்ளதாக பொலிசார் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானிய பிரதமர் மாளிகையில் இருந்து தங்ககழிவறை திருட்டு: திணறும் பொலிசார் -
Reviewed by Author
on
September 15, 2019
Rating:
No comments:
Post a Comment