கனடாவில் நாடாளுமன்றம் கலைப்பு... தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார் ஜஸ்டின் ட்ரூடோ!
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புதன்கிழமை காலை ஆளுநரை தனிப்பட்ட முறையில் சந்தித்து, நாடாளுமன்றத்தை கலைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் பிரதமரின் கோரிக்கையை ஆளுநர் ஏற்றுக்கொண்டதை அடுத்து, அதிகாரபூர்வமாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, கனடாவின் 43 வது பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரம் துவங்கியுள்ளது.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜஸ்டின், இந்தத் தேர்தல் கனேடியர்களுக்கு "அவர்கள் வாழ விரும்பும் கனடாவுக்கு வாக்களிக்க ஒரு வாய்ப்பை வழங்கும்" எனக்கூறினார்.

இரு பக்கங்களிலும் புதியவர்களுக்கு எதிரான இறுக்கமான போட்டியில் தனது தாராளவாத பெரும்பான்மையைப் பிடிக்கும் முனைப்பில் ஜஸ்டின் தீவிரமாக ஈடுபட உள்ளார்.
அறிவிப்பிற்கு முன்னதாகவே கட்சிகள் அனைத்தும் விளம்பரங்கள், அறிவிப்புகள் என நாடு முழுவதும் பிரச்சாரங்களை துவங்கிவிட்டதால் மக்களுக்கு இது ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை.
கனடாவில் நாடாளுமன்றம் கலைப்பு... தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார் ஜஸ்டின் ட்ரூடோ!
Reviewed by Author
on
September 12, 2019
Rating:
No comments:
Post a Comment