தமிழர்களின் பூர்வீக நிலங்களை வனவள திணைக்களம் கையகப்படுத்துவதாக ---நீதி மன்றத்தில் சட்டதரணி டினேசன் வாதம்-படங்கள்
நானாட்டான் பிரதேச சபைக்கு உட்பட்ட கொம்பன் சாய்ந்த குளம் கிராமத்தில் 24 குடும்பங்களைச் சேர்ந்த தமிழர்கள் 1990 ம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்திலிருந்து வசித்து வருகின்றார்கள்.
குறித்த பகுதி மக்கள் காட்டினை துப்பரவு செய்து அரசுக்கு 5000 ரூபா ஏற்படுத்தியுள்ளதாக வனப்பரிபாலன திணைக்களத்தினால் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் 2019.9.6 இன்று வழக்கு தொடரப்பட்டிருந்தது. குறித்த வழக்கானது இன்று மன்னார் நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் அழைக்கப்பட்டது.
சந்தேக நபர் சார்பாக மன்றில் தோன்றிய சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் குறித்த காணியானது வனபரிபாலன திணைக்களத்திற்கு சொந்தமான காணி அல்ல எனவும் இவை குறித்த 24 குடும்பங்களினதும் பூர்வீக நிலங்கள் ஆகும் எனவும் 1990 ம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்திலிருந்து குறித்த பகுதி மக்கள் அவ் இடங்களில் வசித்து வருவதாகவும் தெரிவித்தார்
மேலும் அவர் தெரிவிக்கையில் யுத்தகாலங்களில் தமிழர்களின் காணிகளை இராணுவத்தினர் சுவிகரித்தது போல இன்று வனபரிபாலன திணைக்களங்கள் மற்றும் தொல்பொருள் திணைக்களங்கள் தமிழரின் காணிகளை சுவிகரிக்கின்றன இதனை நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது என வாதத்தில் முன் வைத்தார் .
இதனை செவிமடுத்த நீதவான் இவ்வழக்கை விசாரணைக்காக பிரிதொரு தவணைக்கு ஒத்தி வைத்தார். அதே நேரத்தில் குறித்த பகுதியில் வசிக்குக்கும் ஏனைய மக்களுக்கும் தனித்தனியாக வழக்குகள் தாக்கல் செய்யப்படுள்ளமை குறிப்பிடதக்கது.

Reviewed by Author
on
September 06, 2019
Rating:

No comments:
Post a Comment