மன்னார் மாவட்ட டிப்பர் உரிமையாளர் சங்கம் ஸ்தாபிக்க நடவடிக்கை-
மன்னார் மாவட்டத்தில் டிப்பர் வாகனங்களை வைத்து தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருபவர்களை ஒன்றினைத்து டிப்பர் உரிமையாளர் சங்கம் ஒன்றை உருவாக்க மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட டிப்பர் வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் டிப்பர் வாகனங்களை வைத்து தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாகன உரிமையாளர்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் அவசர கூட்டம் நேற்று வியாழக்கிழமை(5) மாலை மன்னார் மாவட்ட செயலகத்தில் மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.குணபாலன் தலைமையில் இடம் பெற்றது.
குறித்த கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் , பிரதேசச் செயலாளர்கள்,பிரதேச சபைகளின் தவிசாளர்கள், வனவள திணைக்கள அதிகாரிகள், மாவட்ட சுற்றுச் சூழல் உத்தியோகத்தர்கள், நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர்கள், மற்றும் தொடர்புபட்ட திணைக்கள உத்தியோகத்தர்கள்,மன்னார் மாவட்ட டிப்பர் வாகன உரிமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த கலந்துரையாடலில் எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக மன்னார் மாவட்ட டிப்பர் வாகன உரிமையாளர்களை ஒன்றினைத்து சங்கம் ஒன்று அமைப்பது எனவும்,எதிர் வரும் காலங்களில் இச்சங்கத்தின் ஊடாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வது எனவும், மன்னாரில் மண் அகழ்வுகளை அந்தந்த பிரதேசங்களில் இயங்கும் சமாசங்களின் ஊடாக மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே அதனை கருத்தில் கொண்டு மன்னார் மாவட்ட டிப்பர் உரிமையாளர்களுக்கான சங்கம் ஒன்றினை அமைக்கும் அங்குறாப்பணக் கூட்டம் எதிர் வரும் ஞாயிற்றுக் கிழமை (8) மாலை 3 மணியளவில் மன்னார் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இடம் பெறும்.
குறித்த கூட்டத்திற்கு டிப்பர் வாகன உரிமையாளர்கள் கலந்து கொள்ளுமாறு ஒழுங்கமைப்புக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Reviewed by Author
on
September 06, 2019
Rating:
Reviewed by Author
on
September 06, 2019
Rating:

No comments:
Post a Comment