மன்னார் பரப்புக்கடந்தான் காட்டில் நீர் இன்றி யானைகள் கிராமத்திற்குள் வருகை-(படம்)
மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பரப்புக் கடந்தந்தான் கிராமத்தில் உள்ள குளத்திற்கு நீர் குடிப்பதற்காக நோய்வாய்ப்பட்ட நிலையில் யானை ஒன்று வருகை தந்த நிலையில் மீண்டும் காட்டிற்கு திரும்பிச் செல்ல முடியாத நிலையில் குறித்த குளப்பகுதியில் காணப்படுவதாக குறித்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது கடும் வரட்சி ஏற்பட்டுள்ள நிலையில் காட்டில் உள்ள மிருகங்கள் நீர் குடிப்பதற்காக அழைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பரப்புக்கடந்தான் காட்டில் உள்ள யானை ஒன்று நீர் குடிப்பதற்காக இன்று வியாழக்கிழமை 12-09-2019 காலை பரப்புக்கடந்தான் கிராமத்தில் உள்ள குளம் ஒன்றை நாடி வந்துள்ளது.
எனினும் குறித்த யானை காட்டிற்கு திரும்பிச் செல்ல முடியாத நிலையில் உடல் நோய் வாய்ப்பட்ட நிலையில் குறித்த குளப்பகுதியில் படுத்த நிலையில் காணப்படுகின்றது.
-யானை ஒன்று குறித்த குளப்பகுதியில் காணப்படுவதை கண்ட கிராம மக்கள் உடனடியாக கிராம அலுவலகரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் கிராம அலுவலகர் அடம்பன் பொலிஸ்,வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் மேலதிக நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது கடும் வரட்சி ஏற்பட்டுள்ள நிலையில் காட்டில் உள்ள மிருகங்கள் நீர் குடிப்பதற்காக அழைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பரப்புக்கடந்தான் காட்டில் உள்ள யானை ஒன்று நீர் குடிப்பதற்காக இன்று வியாழக்கிழமை 12-09-2019 காலை பரப்புக்கடந்தான் கிராமத்தில் உள்ள குளம் ஒன்றை நாடி வந்துள்ளது.
எனினும் குறித்த யானை காட்டிற்கு திரும்பிச் செல்ல முடியாத நிலையில் உடல் நோய் வாய்ப்பட்ட நிலையில் குறித்த குளப்பகுதியில் படுத்த நிலையில் காணப்படுகின்றது.
-யானை ஒன்று குறித்த குளப்பகுதியில் காணப்படுவதை கண்ட கிராம மக்கள் உடனடியாக கிராம அலுவலகரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் கிராம அலுவலகர் அடம்பன் பொலிஸ்,வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் மேலதிக நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் பரப்புக்கடந்தான் காட்டில் நீர் இன்றி யானைகள் கிராமத்திற்குள் வருகை-(படம்)
Reviewed by Author
on
September 13, 2019
Rating:

No comments:
Post a Comment