அதிக ஏசியில் இருப்பவர்களுக்கு ஏற்படும் உலர் கண்கள் பிரச்னையை
ஏசி அறைகளில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு உலர் கண்கள் ( Dry Eyes) பிரச்னை வர வாய்ப்பு அதிகம்.
கண்களின் ஏரிச்சல் உணர்வு, உறுத்தல், வலி போன்ற உணர்வு,கண்கள் பாரமாக இருப்பது போன்ற உணர்வு, கண்ணீல் நீர் வடிதல், ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.
உலர் கண்கள் பிரச்னை ஏற்படுபவர்களுக்கு வாசிக்கும் வேகமும் குறையும்.
அந்தவகையில் இந்த பிரச்னையை எப்படி தடுப்பது என்பதை பார்ப்போம்.

- ஏசி அறைகளில் அதிக நேரம் இருப்பதைக் குறைத்து கொள்ள வேண்டும்.
- ஏசி அறையின் வெப்பம் 23 டிகிரிக்கும் மேல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
- ஏசி காற்று நேரடியாக முகத்தில்படுவதைப் போன்று உட்காரக்கூடாது.
- நீர்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள், உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
- நீண்ட நேரம் கண் இமைக்காமல் கம்ப்யூட்டர், செல்போன் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- கண்களை அடிக்கடி மூடித்திறப்பதை வழக்கமாகிக் கொள்ள வேண்டும்.
- 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியமானது ஆகும். ஏனெனில் கண்களுக்கு அப்போது தான் கண்களுக்கு போதுமான ஒய்வு கிடைக்கும்.
- வெளியில் செல்லும் போது அடர்நிற கண்ணாடியும், கம்ப்யூட்டரில் பணியாற்றும் போது தேவைப்பட்டால் அதற்காக கண்ணாடியும் கட்டாயம் அணிய வேண்டும்.
- கண்களில் எரிச்சல் தொடர்ந்து காணப்பட்டால் கண் மருந்துவரின் ஆலோசனை பெற்று கண்ணீர் அதிகம் சுரப்பதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- அரிக்காய்களை அலட்சியம் செய்துவிட்டு சிகிச்சை எடுக்காமல் இருந்தால் உலர் கண்கள் பிரச்னை தீவிரமாகி கருவிழி சேதம், கருவிழியில் புண் போன்ற பார்வையைப் பாதிக்கும் தீவிர பிரச்னைகள் ஏற்படலாம்.
அதிக ஏசியில் இருப்பவர்களுக்கு ஏற்படும் உலர் கண்கள் பிரச்னையை
Reviewed by Author
on
September 14, 2019
Rating:

No comments:
Post a Comment