இரட்டைக் குழந்தைகளை விற்று மொபைல் போன் வாங்கிய கொடூர தாய்!
சீனாவிலுள்ள Zhejiang மாகாணத்தில் வசிக்கும் Ma என்னும் இளம்பெண்ணுக்கு, குறைப் பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.
Maவின் கணவனான Wu, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டுள்ள அந்த குழந்தைகளை பார்க்கக்கூட செல்லாத நிலையில், தனது குழந்தைகளை ஒரு தம்பதிக்கு விற்றுள்ளார் Ma.

அந்த குழந்தைகளை Ma பாரமாக எண்ணியதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். ஒரு குழந்தையை 5,100 பவுண்டுகளுக்கும், மற்றொரு குழந்தையை 2,300 பவுண்டுகளுக்கும் விற்ற Ma, தனது கடன்களை அடைத்துவிட்டு, மீதி பணத்தில் புது மொபைல் போன் ஒன்றை வாங்கியுள்ளார்.
குழந்தைகளையே சென்று பார்க்காத அவரது கணவன் Wu வந்து, தனக்கும் சூதாடியதில் கொஞ்சம் கடன் இருப்பதாகவும், குழந்தைகளை விற்ற பணத்தில் தனக்கும் கொஞ்சம் தருமாறும் கேட்டுள்ளார்.
ஆனால் மொத்த பணத்தையும் Maவே செலவு செய்து விட்டிருக்கிறார். நடந்ததைக் குறித்து ஒருவர் பொலிசாருக்கு துப்புக் கொடுக்க, பொலிசார் கணவனையும் மனைவியையும் கைது செய்துள்ளார்கள்.
விசாரணை மேற்கொண்டு, குழந்தைகளை கைப்பற்றியுள்ள பொலிசார், தற்காலிகமாக குழந்தைகளை அவற்றின் தாய் வழி பாட்டியிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
தம்பதி செய்தது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை அவர்களுக்கு விவரித்த பொலிசார், குழந்தை கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் Ma மற்றும் Wu இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என்றும், குழந்தையை தத்தெடுத்தவர்களுக்கும் தண்டனை உண்டு என்றும் தெரிவித்துள்ளார்கள்.

இரட்டைக் குழந்தைகளை விற்று மொபைல் போன் வாங்கிய கொடூர தாய்!
Reviewed by Author
on
September 14, 2019
Rating:
No comments:
Post a Comment