மன்னார் பரப்புக்கடந்தான் காட்டுப்பகுதியில் உயிரிழந்த நிலையில் யானை மீட்பு-படங்கள்
மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பரப்புக் கடந்தான் கிராமத்தில் உள்ள குளத்திற்கு நீர் குடிப்பதற்காக நோய் வாய்ப்பட்ட நிலையில் கடந்த 12 ஆம் திகதி யானை ஒன்று வருகை தந்த நிலையில் குறித்த யானை தொடர்பில் உரிய அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தாத நிலையில் குறித்த யானை உயிரிழந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை 17/09/2019 மீட்கப்பட்டுள்ளது.
பரப்புக்கடந்தான் கிராமத்தில் உள்ள குளத்திற்கு நீர் குடிப்பதற்காக நோய் வாய்ப்பட்ட நிலையில் கடந்த 12 ஆம் திகதி யானை ஒன்று வருகை தந்த நிலையில் மீண்டும் குறித்த யானை காட்டிற்கு திரும்பிச் செல்ல முடியாத நிலையில் குறித்த குளப்பகுதியில் காணப்பட்டுள்ளது.
-உடனடியாக அப்பகுதி மக்கள் கிராம அலுவலகர் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
-எனினும் உரிய நேரத்திற்கு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சமூகமளிக்கவில்லை.இந்த நிலையில் மக்களின் ஒத்துழைப்புடன் குறித்த யானை குளத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் காட்டுப்பகுதிக்கு துரத்தி விடப்பட்டது.
-எனினும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் அப்பகுதிக்கு வருகைதரவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.
-இந்த நிலையில் குறித்த நோய்வாய்ப்பட்டிருந்த யானை குளத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தொலைவில் உயிரிழந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை 17/09/2019 மதியம் கண்டு பிடிக்கப்பட்டது.
-தற்போது வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்து யானையின் மரணம் தொடர்பாக விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
https://youtu.be/03IiJIQD8sA

Reviewed by Author
on
September 18, 2019
Rating:
Reviewed by Author
on
September 18, 2019
Rating:

No comments:
Post a Comment