ரணிலிடமிருந்து கனிமொழிக்கு கிடைத்த பரிசு -
இலங்கை வந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் புத்தகமொன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் புதல்வியின் திருமண நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
உலகளாவிய ரீதியிலிருந்தும் பல்வேறு முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்திருந்தனர்.
இதன் அடிப்படையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைத் தலைவரும், கலைஞர் கருணாநிதியின் புதல்வியும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான கே.கனிமொழியும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் கனிமொழி உள்ளிட்ட குழுவினர் இன்று காலை அலரி மாளிகையில் வைத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர்.
இதன்போது இலங்கை - இந்திய நட்புறவு, மீனவர் பிரச்சினைகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், பிரதமர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இந்த சந்திப்பில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொஹிதீன், திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைத் தலைவரும் , இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான கே.கனிமொழி, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.ரீ. முஹம்மத் பஷீர், பீ.வீ. அப்துல் வஹ்ஹாப், கே.நவாஸ்கனி, கவிஞர் ஆளூர் சா நவாஸ், முன்னாள் கேரள இராஜாங்க அமைச்சர் அப்துல் மஜீத், இந்திய சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் தமிழ் நாடு வக்பு சபை உறுப்பினருமான பாத்திமா முஸஃப்பர், முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் உட்பட பல்வேறு முக்கியஸ்த்தர்கள் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர்களான அலி ஸாஹிர் மௌலானா, பைஸல் காசிம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் ஆகியோரும் குறித்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரணிலிடமிருந்து கனிமொழிக்கு கிடைத்த பரிசு -
Reviewed by Author
on
September 14, 2019
Rating:

No comments:
Post a Comment