மன்னார் நீதிமன்றத்தை அவமதித்த இளைஞன் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை.
மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தை அவமதித்ததாக இளைஞன் ஒருவரை பொலிசார் கைது செய்து வழக்கு தாக்கல் செய்தபொழுது குறித்த இளைஞன் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
இவ் சம்பவம் நேற்றைய தினம் திங்கள் கிழமை (16.09.2019) மன்னார் மாவட்ட
நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.
நேற்று திங்கள் கிழமை காலை மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபொழுது இளைஞன்
ஒருவன் நீதிமன்றில் சத்தம் செய்துள்ளார்.
இதை கவனித்த நீதிமன்ற பொலிசார் இவரை கைது செய்து நீதிமன்ற கூண்டக்குள் அடைக்க முற்பட்டபோது இவரின் சத்தம் மீண்டும் ஒலிக்கவே நீதிபதியின் கட்டளைக்கு அமைவாக இவ் நபர் பொலிசாரால் வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.
பின் இவ் நபருக்கு எதிராக பொலிசார் வழக்கு தாக்கல் செய்து நீதிபதி
மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது இவர் போதையில் இருந்ததுடன் தானும் அம்மாவும் கடலை விற்றே பிழைப்பு நடத்துகின்றோம் என மன்றில் சத்தம் போட்டு நீதிபதியிடம் தெரிவித்தார். நீதிபதி இவ் நபரை கடும் எச்சரிக்கையுடன் விடுதலை செய்தார்.

Reviewed by Author
on
September 17, 2019
Rating:

No comments:
Post a Comment