மற்றவர்களை பற்றி அவருக்கு எந்த கவலையும் இல்லை.. சேரனின் உண்மை முகத்தை உடைத்த நடிகர் பார்த்திபன்..!
இந்நிலையில் நடிகர் பார்த்திபன் பிக்பாஸை பற்றி ஊடகத்திற்கு பேட்டியளித்ததில், சேரனை பற்றி கேட்டதற்கு அவர், ஒரு சின்சியரான இயக்குனர். அவர் மற்றவர்கள் காயப்படுவதை பற்றி கவலைப்பட மாட்டார்.
மேலும், அவருடைய பாரதி கண்ணம்மா படம் ஜாதி ஒழிப்பு பற்றி சமூகத்தில் பேசப்பட்ட ஒரு படம். அந்த படம் எடுக்கும் போது அவர் ரொம்ப சீரியசாக இருப்பதை உணர்ந்தேன். அதற்காக படத்தில் நானும், வடிவேலும் கொஞ்சம் டிராக்கை மாத்தி காமெடியை பயன்படுத்தினோம். ஆனால் சேரன் அதற்கு சம்மதிக்கவே இல்லை.
நான் கொடுத்த காமெடி ஒர்க்கவுட் ஆகவில்லை என்றால் அவருக்கு நல்ல பெயர் கிடைக்காது என அந்த காட்சியை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்.
நாங்க எல்லோரும் பேசி சம்மதிக்க வைத்தோம். அதன் பின்பு தான் வெற்றிக்கொடிக்கட்டு படத்தில் காமெடி சீனை உருவாக்கி என்னையும் வடிவேலையும் நடிக்க வைத்தார். அந்த அளவிற்கு சின்சியரான இயக்குனர் நல்ல மனிதரும் கூட.
மேலும், ஒத்த செருப்பு படத்தில் பிஸியாக இருந்ததால் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கவில்லை, ஆகையால் சேரனின் நடவடிக்கைகளை பற்றி விமர்ச்சிக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
மற்றவர்களை பற்றி அவருக்கு எந்த கவலையும் இல்லை.. சேரனின் உண்மை முகத்தை உடைத்த நடிகர் பார்த்திபன்..!
Reviewed by Author
on
September 17, 2019
Rating:

No comments:
Post a Comment