பிரித்தானியா பிரதமரின் சகோதரர் ஜோ ஜான்சன் அதிரடி முடிவு: அமைச்சர் மற்றும் எம்.பி பதவியில் இருந்து விலகல்
வணிக அமைச்சரும், Orpington எம்.பி.யுமான ஜோ ஜான்சன், தனது பொறுப்பில் தீர்க்கமுடியாத பிரச்னை இருப்பதாக ட்வீட் செய்துள்ளார்.
இதுகுறித்து ஜோ ஜான்சன் ட்விட்டரில் பதிவிட்டதாவது, 9 ஆண்டுகளாக Orpington-ஐ சேவை செய்ததற்கும், மூன்று பிரித்தானியா பிரதமர்களின் கீழ் அமைச்சராக பணியாற்றியதற்கும் பெருமை படுகிறேன்.
சமீபத்திய வாரங்களில், குடும்ப விசுவாசத்திற்கும் தேசிய நலனுக்கும் இடையில் நான் சிக்கி தவிக்கிறேன். இது தீர்க்கமுடியாத பிரச்னை. எனவே, எம்.பி. மற்றும் அமைச்சராக எனது பொறுப்பை மற்றவர்கள் ஏற்றுக்கொள்வதற்கான நேரம் இது என தெரிவித்துள்ளார்.

2016 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் வாக்கெடுப்பில், ஐரோப்பிய ஒன்றியத்துடனே பிரித்தானியா இருக்க வேண்டும் என ஜோ ஜான்சன் வாக்களித்தார். அவர் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எதிர்த்து கடந்த ஆண்டுதெரசா மேவின் கீழ் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஆனால், கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் அவரது சகோதர் போரிஸ் ஜான்சானை தலைவராக தேர்ந்தெடுத்த பின்னர், ஜோ ஜான்சன் மீண்டும் அரசாங்கத்தில் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியா பிரதமரின் சகோதரர் ஜோ ஜான்சன் அதிரடி முடிவு: அமைச்சர் மற்றும் எம்.பி பதவியில் இருந்து விலகல்
Reviewed by Author
on
September 06, 2019
Rating:
No comments:
Post a Comment