ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சற்று முன்னர் ஏக மனதாக தீர்மானம்! -
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ பெயரிடப்பட்டுள்ளார்.
அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற விசேட சந்திப்பின் போது ஏகமனதாக சஜித் பிரேமதாஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நியமிக்குமாறு கட்சித் தலைவர்கள் ஏகமனதாக தமது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாக கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவர் சற்று முன்னர் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியலமைப்புக்கு ஏற்ப, எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளரைத் தீர்மானிக்குமாறும் கூட்டணியிலுள்ள கட்சித் தலைவர்கள் கேட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சற்று முன்னர் ஏக மனதாக தீர்மானம்! -
Reviewed by Author
on
September 25, 2019
Rating:

No comments:
Post a Comment