அமெரிக்காவில் ராஜ் ராஜரத்தினம் விடுதலை -
அமெரிக்காவில் நடந்த மிகப் பெரிய நிதி மோசடியில் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டில் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கை வம்சாளி அமெரிக்க பிரஜையும் கெலியோன் நிறுவனத்தின் தலைவருமான ராஜ் ராஜரத்தினம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
காப்பீட்டு சட்டங்களை மீறி மிகப் பெரிய நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவருக்கு கடந்த 2011ஆம் ஆண்டு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கெலியோன் நிறுவனத்தை ஆரம்பித்த பின்னர் பெரும் செல்வந்தமாக மாறிய ராஜ் ராஜரத்தினம் தொடர்பாக அமெரிக்காவின் சமஷ்டி விசாரணை பணியகம் நீண்டகால விசாரணைகளை நடத்தியது.
கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு அமைய 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் வீட்டுக்காவலில் தமது தண்டனை காலத்தை நிறைவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அமைய ராஜ் ராஜரத்தினம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ராஜ் ராஜரத்தினம், விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி வழங்கியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அமெரிக்காவில் ராஜ் ராஜரத்தினம் விடுதலை -
Reviewed by Author
on
September 07, 2019
Rating:

No comments:
Post a Comment