5 தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் நாளை கொழும்பில் பேச்சு! -
ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்கப்படவுள்ள பொது ஆவணத்தில் கையயாப்பமிட்ட 5 தமிழ்க் கட்சிகளினதும் தலைவர்கள் நாளை மாலை கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்.
கொழும்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.
ஐந்து கட்சிக் கூட்டணியுடன் பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதித் தேர்தலின் பிரதான வேட்பாளர்களில் ஒருவர் மட்டுமே தற்போது தயாராக உள்ளமையால் அது தொடர்பில் ஆராய்வதற்காகவே இன்று இந்தக் கட்சிகள் கூடிப் பேசவுள்ளன எனத் தெரிகின்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி, புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ் மக்கள் கூட்டணி ஆகியனவே இந்தப் பேச்சில் பங்கேற்கவுள்ளன.
5 தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் நாளை கொழும்பில் பேச்சு! -
Reviewed by Author
on
October 24, 2019
Rating:

No comments:
Post a Comment