நீண்ட காலமாக பாதீப்படைந்திருந்த ஆத்திக்குழி குளக்கட்டு பிரதான வீதி கொங்கிரீட் வீதியாக அமைக்கும் பணி ஆரம்பம்-
நீண்ட காலமாக பாதீப்படைந்த நிலையில் காணப்பட்ட நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆத்திக்குழி குளக்கட்டு பிரதான வீதி கெங்கிரீட் வீதியாக அமைக்கும் பணி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் நிதி ஒதுக்கீட்டில் இன்று புதன் கிழமை காலை 10 மணியளவில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
-மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி ஆகியோர் இணைந்து குறித்த வீதி அமைக்கும் பணியை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.
10 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 550 மீற்றர் நீளம் கொண்ட ஆத்திக்குழி குளக்கட்டு பிரதான வீதி கொங்கிரீட் வீதியாக அமைக்க ஆரம்ப பணிகள் இடம் பெற்றது.
-இதன் போது நானாட்டான் பிரதேச சபையின் உப தலைவர் எஸ்.லூர்துநாயகம் (புவனம்),நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்கள்,டெலோ இயக்கத்தின் இளைஞர் அணி செயலாளர் ஜீ.பிறேம்,பாராளுமன்ற உறுப்பினரின் மாவட்ட இணைப்பாளர் ப.மதன் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த வீதி அமைக்கும் பணியை ஆரம்பித்து வைத்தனர்.
- இதே வேளை உமநகரி மற்றும் அச்சங்குளம் வீதிகளும் தலா 10 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கொங்கிரீட் வீதியாக அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி ஆகியோர் இணைந்து குறித்த வீதி அமைக்கும் பணியை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.
10 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 550 மீற்றர் நீளம் கொண்ட ஆத்திக்குழி குளக்கட்டு பிரதான வீதி கொங்கிரீட் வீதியாக அமைக்க ஆரம்ப பணிகள் இடம் பெற்றது.
-இதன் போது நானாட்டான் பிரதேச சபையின் உப தலைவர் எஸ்.லூர்துநாயகம் (புவனம்),நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்கள்,டெலோ இயக்கத்தின் இளைஞர் அணி செயலாளர் ஜீ.பிறேம்,பாராளுமன்ற உறுப்பினரின் மாவட்ட இணைப்பாளர் ப.மதன் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த வீதி அமைக்கும் பணியை ஆரம்பித்து வைத்தனர்.
- இதே வேளை உமநகரி மற்றும் அச்சங்குளம் வீதிகளும் தலா 10 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கொங்கிரீட் வீதியாக அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நீண்ட காலமாக பாதீப்படைந்திருந்த ஆத்திக்குழி குளக்கட்டு பிரதான வீதி கொங்கிரீட் வீதியாக அமைக்கும் பணி ஆரம்பம்-
Reviewed by Author
on
October 02, 2019
Rating:

No comments:
Post a Comment