மன்னார் மடு கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கி வைப்பு
உலக பார்வை தினத்தையொட்டி டீப் லங்கா ' '‘DEAF LINK’ நிறுவனத்தின்ஏற்பாட்டில் மடு கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான இலவச கண் பிரிசோதனை முகாம் மற்றும் இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை 17/10/2019 காலை 10.30 மணியளவில் அடம்பன் ம.வி பாடசாலையில் இடம் பெற்றது.
-மடு வலயக் கல்விப்பணிமனையின் அனுசரனையில் இடம் பெற்ற குறித்த இலவச கண் பிரிசோதனை முகாமில் மடு கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 300 மாணவர்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனைகளை மேற்கொண்டதோடு,தேவைப்பட்ட மாணவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டது.
-குறித்த நிகழ்வில் டீப் லங்கா ‘DEAF LINK’ அமைப்பின் பிரதி நிதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மடு கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கி வைப்பு
Reviewed by Author
on
October 17, 2019
Rating:

No comments:
Post a Comment