ஊடக செய்தியினால் புதிய சோதனை சாவடிகள் தளர்வு
அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் நாவிதன்வெளி பகுதியில் அமைக்கப்பட்ட புதிய நிரந்திர சோதனை சாவடியில் சோதனை நடவடிக்கை ஊடகங்களில் வெளிவந்த செய்தியினால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை(30) மாலை திடிரென உழவு இயந்திரத்தில் வந்த சுமார் 15 க்கும் அதிகமான இராணுவத்தினர் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு அருகே உள்ள சவளக்கடை சந்தியில் நிரந்திர சோதனை சாவடி ஒன்றை அமைத்து சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சோதனை சாவடி தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.
இதனை அடுத்து குறித்த சோதனை சாவடியில் இராணுவத்தினர் சோதனைகளை மட்டுப்படுத்தியுள்ளதுடன் சோதனை சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும் குறித்த பகுதிகளில் கடந்த ஒரு வாரங்களாக இராணுவத்தினரால் தொடர் தேடுதல்கள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
October 02, 2019
Rating:

No comments:
Post a Comment