மாற்றுதிறனாளி சிறுவர்களின் பேரணி
சிறுவர் மீதான துஷ்பிரயோகங்கள் குறித்த செய்திகளை பார்க்கும்போது வேதனையளிக்கிறது என மருதமுனை Human link மாற்றுத்திறனாளிகளின் பாடசாலை அதிபர் ஏ.கமருதீன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மருதமுனை Human link மாற்றுத்திறனாளிகளின் பாடசாலை மாணவர்களது பேரணி இடம்பெற்றது.
செவ்வாய்க்கிழமை(1) அதிபர் ஏ.கமருதீன் தலைமையில் இப்பேரணி இடம்பெற்றதுடன் மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி பிரதான வீதியிலிருந்து பிரதான வீதி ஊடாக Human link மாற்று திறனாளிகள் பாடசாலை வரை பேரணியாக சென்றனர்.
இதன்போது நாளைய உலகம் உங்கள் கையில் நாட்டை நேசிப்பது போல் இஉங்களை நேசியுங்கள்இ சிறார்கள் விலைமதிப்பற்ற சாதனை செல்வங்கள் உங்கள் எண்ணங்களுக்கு மதிப்பளியுங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் பேரணியாகச் சென்றனர்.
இந்த பேரணியில் மாணவர்கள் ஆசிரியர்கள் அதிபர் பெற்றோர்கள் ஆதரவாளர்கள் என பலரும் சென்றனர்.
இதனைத்தொடர்ந்து பாடசாலை அதிபர் ஏ.கமறுதீன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.
மாணவர்களது கல்வி கல்வி சாரா முன்னேற்றங்களை விட இன்றைய சிறார்கள் நாளைய தலைவர்கள் என்ற கருத்துக் அமைய மாணவச் செல்வங்களது .பாதுகாப்பு பிரதானமானது.
குறிப்பாக பெற்றோர் ஆசிரியர்கள் மட்டுமல்லாது முழு சமூகமும் சிறார்களது பாதுகாப்பு விடயத்தில் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் இருக்கின்றனர்.
அண்மைக் காலங்களாக சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. கடந்த மாதம் சிறுவர் மீதான துஷ்பிரயோகங்கள் குறித்த செய்திகளை பார்க்கும்போது வேதனையளிக்கிறது என தெரிவித்தார்.

Reviewed by Author
on
October 02, 2019
Rating:

No comments:
Post a Comment