மன்னார் மறைமாவட்ட ஆயர் மற்றும் இலங்கைக்கான கனேடிய தூதுவருக்கும் இடையில் விசேட சந்திப்பு-
மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டெவோயிட் மெக்கின்னனுக்கும் (Mr. Devoid McKinnon) இடையில் இன்று புதன் கிழமை காலை 10 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்தில் விசேட சந்திப்பு இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளாரும் கலந்து கொண்டிருந்தார்.
-குறித்த சந்திப்பின் போது மன்னார் மாவட்டத்தின் தற்போதைய நிலமை தொடர்பாகவும் குறிப்பாக கடந்த ஏப்பிரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டில் இடம் பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்குப் பின் மன்னார் மாவட்டத்தில் சமய, இன ஒற்றுமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திகள் தொடர்பில் மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டெவோயிட் மெக்கின்னு மன்னார் மறைமாவட்ட ஆயரிடம் கேட்டு அறிந்து கொண்டனர்.
இதன் போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளாரும் கலந்து கொண்டிருந்தார்.
-குறித்த சந்திப்பின் போது மன்னார் மாவட்டத்தின் தற்போதைய நிலமை தொடர்பாகவும் குறிப்பாக கடந்த ஏப்பிரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டில் இடம் பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்குப் பின் மன்னார் மாவட்டத்தில் சமய, இன ஒற்றுமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திகள் தொடர்பில் மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டெவோயிட் மெக்கின்னு மன்னார் மறைமாவட்ட ஆயரிடம் கேட்டு அறிந்து கொண்டனர்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் மற்றும் இலங்கைக்கான கனேடிய தூதுவருக்கும் இடையில் விசேட சந்திப்பு-
Reviewed by Author
on
October 31, 2019
Rating:

No comments:
Post a Comment