அண்மைய செய்திகள்

recent
-

முதியோர் இல்லத்தில் தீ - பலி எண்ணிக்கை உயர்வு

ஹொரணை - அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் அமைந்துள்ள 'செனஹஸே கெதெல்ல' முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் தீக்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார். 

இதன்படி, முன்தினம் (3) ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 13 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த தீ விபத்தில் மேலும் 5 பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

விபத்து நடந்த வேளையில் இந்த முதியோர் இல்லத்தில் 72 பேர் தங்கியிருந்தனர் என்பதுடன், தீ விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் 10 பேர் கட்டிடத்திற்குள்ளேயே தீயில் கருகி உயிரிழந்திருந்தனர்.





முதியோர் இல்லத்தில் தீ - பலி எண்ணிக்கை உயர்வு Reviewed by Vijithan on June 05, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.