இலங்கையில் தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளும் பறிப்பு? கொதித்தெழுந்த சார்ள்ஸ் -
இலங்கையில் சிங்கள தலைவர்களின் செயற்பாட்டால் அங்கு தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
முல்லைத்தீவு நிரவியடி விகாரை சம்பவமானது அதற்கு சிறந்த உதாரணம் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
சிங்கள தலைவர்களின் அடாவடி தனமான செயலானது தமிழ் மக்கள் இலங்கையில் வாழ்வதற்கு அச்ச நிலையை உருவாக்கி இருப்பதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டார். நீதிமன்ற உத்தரவை தூக்கி எறிந்த சிங்கள தலைவர்கள் தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுகொள்வார்களா? அது கூட சந்தேகமாக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கையில் தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளும் பறிப்பு? கொதித்தெழுந்த சார்ள்ஸ் -
Reviewed by Author
on
October 08, 2019
Rating:

No comments:
Post a Comment