மன்னாரில் வர்த்தக நிலையங்களின் சுற்றிவளைப்பில் வர்த்தகர்கள் பலர் அகப்பட்டுக் கொண்டனர்.
மன்னார் மாவட்டத்தில் பாவனையாளர்கள் இரகசிய சுற்றி வளைப்பு புலன்விசாரனை அதிகாரிகள் பல கிராமங்களிலுள்ள வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையில் பல வர்ததகர்கள் அகப்பட்டுக் கொண்டனர்.
இதில் காலாவதியான பொருட்கள் மற்றும் கூடிய விலைகளுக்கு உணவுப் பொருட்கள் விற்றமை, முகவரியிடப்படாத உணவுப் பொருட்கள் விற்றமை போன்ற குற்றச்சாட்டின்கீழ் இவர்கள் அகப்பட்டுக் கொண்டனர்.
இதில் 16 வர்ததகர்களுக்கு எதிராக நேற்று முன்தினம் புதன் கிழமை
(16.10.2019) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இவர்களுக்கு எதிராக
தனித் தனி குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.
அத்துடன் ஒருவரைத் தவிர 15 சந்தேக நபர்கள் மன்னார் மாவட்ட நீதவான்
நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் ஆஐர்படுத்தப்பட்டனர்.
இதில் இறக்குமதியாளர், வழங்குனர் மற்றும் விநியோகஸ்தர்களின் பதிவு
செய்யப்பட்ட முகவரியிடப்படாத கிறீம், குளியல் சவர்க்காரம் விற்பனை
செய்தவர்களுக்கு தலா 3000 ரூபாவும், ஒரு பெண் வியாபாரி காலாவதியான
குளீர்பானம் விற்பனை செய்தமைக்காக 4500 ரூபாவும்,
- கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி மா விற்றமைக்கு 6000 ரூபாவும், விலைகள் காட்சிப்படுத்தாது சிற்றுண்டி விற்றமைக்கு 1500 ரூபாவும்,
- விலைகாட்சிப்படுத்தாது சிவப்பு அரிசி விற்றவருக்கு 1500 ரூபாவும்,
- கட்டுப்பாட்டு விலையை மீறி சிவப்பு அரிசி விற்றவருக்கு 6000 ரூபாவும்,
- விலை காட்சிப்படுத்தாது நெத்திலி கருவாடு விற்பனை செய்தவருக்கு 1000
- ரூபாவும்கட்டுப்பாட்டு விலையை மீறி வெள்ளை சம்பா அரிசி விற்றவருக்கு 4000
நீதவானின் முன்னிலையில் ஆஐர்படுத்தப்பட்ட இவர்கள் தங்கள் குற்றங்களை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்தே இவ் அபராதங்கள் விதிக்கப்பட்டன.
மன்னாரில் வர்த்தக நிலையங்களின் சுற்றிவளைப்பில் வர்த்தகர்கள் பலர் அகப்பட்டுக் கொண்டனர்.
Reviewed by Author
on
October 17, 2019
Rating:

No comments:
Post a Comment