கோத்தபாய ஆட்சி அமைத்தாலும் ரணில் தான் பிரதமர்! -
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்றாலும் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவே செயற்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஏதாவதொரு வகையில் கோத்தபாய ஜனாதிபதியானால் பிரதமரை மாற்ற முடியாது. அதற்கு நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை அவசியமாகும்.
சமகால அரசாங்கத்தை நான்கரை வருடங்களின் பின்னரே கலைக்க முடியும். அதற்கமைய தற்போதைய அரசாங்கத்தின் நான்கரை வருடம் எதிர்வரும் மார்ச் மாதமே நிறைவடைகின்றது. அதுவரை பிரதமராக ரணில் விக்ரமசிங்க செயற்படுவார்.
இது தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு ஒன்று உள்ளது. எப்படியிருப்பினும் கோத்தபாய ராஜபக்சவினால் தேர்தலில் வெற்றி பெற முடியாது” என ஹிருணிக்கா மேலும் தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ஆட்சி அமைத்தாலும் ரணில் தான் பிரதமர்! -
Reviewed by Author
on
October 17, 2019
Rating:

No comments:
Post a Comment