பாப்பாமோட்டை, பாலமுனை கடற்பரப்பிலுள்ள வள்ள ஓடுபாதையினையை விரைவில் அமைத்துதர கோரிக்கை.
மன்னார் பாப்பாமோட்டை, பாலமுனை கடற்பரப்பிலுள்ள வள்ள ஓடுபாதையினையை ஏற்கனவே திட்டமிட்டவாறு விரைவில் அமைத்து தருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்படி இப் பகுதி மீனவர்கள் வட ஆளுநரின் கவனத்துக்கும் வன்னி பாராளுமன்னற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்துக்கும் கொண்டு வந்துள்ளனர்.
பாப்பாமோட்டை மற்றும் பாலமுனை பகுதியில் 265 குடும்பங்கள் வாழ்ந்து
வருகின்றபோதும் இதில் 65 குடும்பங்கள் மீனவ குடும்பங்களாகும்.
இவ் மீனவ குடும்பங்கள் சிறு மீன்பிடியாளர்களாக இருக்கின்றபோதும் இவர்கள் தங்கள் படகுகளை சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள ஒரு ஓடு பாதையூடாகவே தரையிலிருந்து கடலுக்கு இழுத்துச் செல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.
இதை இவ் பகுதி மீனவர்கள் வன்னி பாராளுமன்னற உறுப்பினர் கவனத்துக்கு
கொண்டு வந்தததைத் தொடார்ந்து கடந்த வருடம் (2018) வன்னி பாராளுமன்ற
உறுப்பினர் சாள்ளஸ் நிர்மலநாதன் எடுத்துக் கொண்ட தீவிர முயற்சியால் ஆசிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பத்து மில்லியன் ரூபா செலவில் இவ் வள்ள ஓடு பாதை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் இவ் வள்ள ஓடுபாதையை அமைப்பதற்கு வன இலாகா தங்கள் காணிப் பரப்பினூடாக அமைப்பதற்கு தடை விதித்திருந்தது.
இருந்தபோதும் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் தீவிர
முயற்சியால் இவ் தடை தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடாந்து பாப்பாமோட்டை புனித சிந்தாத்திரை மாதா கடற்தொழில்
கூட்டுறவுச் சங்க நிர்வாகத்தினர் பாப்பாமோட்டை பாலமுனை மீனவர்களின்
வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு கடற்பரப்பை நோக்கி அமையவுள்ள வள்ள ஓடுபாதையினை விரைவில் அமைத்து தருவதற்கு தீவிர கவனம் செலுத்தும்படி வட மாகாணம் ஆளுநர் மற்றும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
இதைத் தொடாந்து வட மாகாண ஆளுநர் செயலகம் மன்னார் மாவட்ட செயலாளருக்கும், மன்னார் கடற்தொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளருக்கும் பொருத்தமான நடவடிக்கையினை மேற்கொண்டு இது தொடர்பான அறிக்கையினை ஆளுநருக்கு சமர்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

Reviewed by Author
on
October 14, 2019
Rating:

No comments:
Post a Comment