பதவியை துறந்த பின்னர் மைத்திரி வழங்கிய கடும் உத்தரவு!
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினைச் சேர்ந்தவர்களே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தின் பாதுகாப்பு கடமையில் தொடர்ந்தும் ஈடுபடுவார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலகியுள்ளார்.
இந்நிலையில் தலைமையகப் பாதுகாப்பு பிரிவினர் தொடர்ந்தும் கடமையில் ஈடுபடமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு தலைமையகத்தில் கடமையாற்றும் முக்கியஸ்தர்களால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆலோசித்த ஜனாதிபதி தன்னுடைய அனுமதியின்றி தலைமையக பாதுகாப்பு உள்ளிட்ட எந்தவொரு விடயத்திலும் முடிவுகளை எடுக்கவேண்டாம் என்றும் கடுமையான உத்தரவினை அலுவலகத்தில் கடமையாற்றும் முக்கியஸ்தர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இச்சமயத்தில், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினைச் சேர்ந்தவர்களே தலைமையகத்தின் பாதுகாப்பு கடமையில் தொடர்ந்தும் ஈடுபடுவார்கள்.
என்னுடைய அனுமதியின்றி தலைமையக பாதுகாப்பு உள்ளிட்ட எந்தவொரு விடயத்திலும் முடிவுகளை எடுக்கவேண்டாம் என்று கடுமையான உத்தரவினை அலுவலகத்தில் கடமையாற்றும் முக்கியஸ்தர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
பதவியை துறந்த பின்னர் மைத்திரி வழங்கிய கடும் உத்தரவு!
Reviewed by Author
on
October 14, 2019
Rating:

No comments:
Post a Comment