நடைபெற்றது Miss tamil universe Canada ? அல்லது Miss &Mrs tamil universe Canada?
Miss tamil universe Canada 2019 கடந்த 27 செப்டம்பர் 2019 இடம்பெற்றது அறிந்ததே.
அதில் Viewer choice award வேண்டும் என்றோ இல்லை இன்னாருக்குத்தான் இந்த விருது கொடுக்கப்பட்டதாக வேண்டும் என்ற அடிப்படையில் மாற்றிக்கொடுக்கப்பட்டதா?
(ஏனெனில் வாக்கெடுப்பில் அதிக எண்ணிக்கையான வாக்கு எடுத்தவருக்கு Viewer choice award விருது மேடையில் வைத்து கொடுக்கப்படவில்லை.)
இதுபற்றி பங்குபற்றியோர் தவிர எவருக்கும் தெரியாது. இது குறித்து சம்பந்தமான இவ்விழா நடாத்தியோரிடம் கேட்ட போது, அது மாறி கொடுக்கப்பட்டதாகவும் 8ம் நம்பருக்கு பதிலாளாக 12 நம்பருக்கு கொடுத்து விட்டார்கள் நீதிபதிகள்,
அதற்காக வருந்துவதாகவும் கூறினார்கள். (ஆனால் பெயரை சொல்லியே மேடையில் அழைத்து award கொடுக்கப்பட்டது). ஏன் மாற்றி கொடுக்கப்பட்டது என தங்களுக்கு தெரியாது எனவும் கூறினார்கள்.
பிழையாக கொடுக்கப்பட்ட விருதை திருப்பி எடுக்க ஏதும் நடவடிக்கைகள் எடுப்பார்களா? இதுவரை எடுக்கப்படவில்லை.மற்றும் 3ம் இடம்பெற்ற கமலினி ஜெயக்குமார் திருமணமாவர் என புகைப்பட ஆதார குற்றச்சாட்டு வைக்கப்பட்ட பொழுது,
இல்லை அந்தபுகைப்படம் பொய்யான குற்றச்சாட்டு எனவும் உண்மையில் ஒரு விளம்பரத்துக்கா எடுக்கப்பட்டது எனவும், தேவையில்லாத பொய்ப் பிரச்சாரம் செய்ய வேண்டாம் எனவும் விழா நடத்தியோர் கண்டன குரலில் கூறினார்கள்.தங்களிடம் ஆதாரம் இருப்பதாகவும், இலங்கை விதானையாரின் (GS) கையெழுத்து படிவம் தங்களிடம் உள்ளது
என பல காரணங்களை முன் வைத்தார்கள். இது பற்றிய மேலதிக தகவல்கள் திரட்ட விழா நடாத்துனர் திரு நரேன் இலங்கை சென்று தகவல்கள் பெற்று இதன் உண்மைத்தன்மையை வெளிக்கொண்டு வந்து மக்கள் முன் சமர்ப்பிப்பார் என விழா அமைப்பினர்களால் தெரிவிக்கப்பட்டது.
உண்மையில் அப்பெண் திருமணம் ஆனவர் என் நிரூபிக்கும் பட்சத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட விருதை திருப்பி எடுத்து அடுத்த வரிசையில் உள்ளவருக்கு சமர்ப்பிக்க போவதாகவும் கூறினார்கள்.
(எந்த கேள்விக்கும் கோபப்பட்டு மறுப்பவர்களாகவே உள்ளார்களே அன்றி கேள்விகளையோ, ஆதாரத்தையோ செவிமடுப்பவர்களாக விழா அமைப்பார்கள் இல்லை. எனவே இவர்களுக்கு தெரிந்தே தான் இது நடைபெற்றதா என்ற சந்தேகம் வலுக்கின்றது.)
ஆனால் கேள்வி யாதெனில் இங்கு கனடாவில் miss tamil universe இல் பங்குபற்றிய இன்னொரு போட்டியாளரும் திருமணமானவர் என கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் விழா அமைப்பினர் மறுக்கின்றார்கள்.எனவே இது சம்பந்தமாக நாமே தேடல்களை தொடங்கினோம்.விழாவில் பங்குபற்றிய அந்த போட்டியாளரை நாமே நேரடியாக தொடர்புகொண்டு இதுபற்றிய எம்மிடமுள்ள ஆதாரங்களை முன்வைத்து கேள்வியெழுப்பினோம்.
அதற்க்கு அவர், தனக்கு திருமணம் ஆனதை ஒப்புக்கொண்டதுடன், இதை தான் மறுக்கவில்லை என்றும், விழா நடத்துனர்களுடன் "தனக்கு திருமணமாகிவிட்டது என் தெரிவித்தும் விழா நடாத்துனர் சார்பில் திரு நரேன் அவர்கள் தன்னை கலந்து கொள்ள அனுமதித்ததுடன், திருமணம் நடந்ததை வெளியில் சொல்லவேண்டாம் எனவும் புகைப்பட ஆதாரங்கைளை சமூகவலைத்தளங்களில் இருந்து நீக்குமாறு தெரிவித்துள்ளார்.அவரின் அனுமதியுடன் இந்த உரையாடலை நாம் பதிவும் செய்தோம்.
இங்கு கனடாவிலேயே திருமணமானவரை பங்குபற்ற சொல்லிய விழா அமைப்பாளர் இலங்கை சென்று எந்த ஆதாரத்தை கொண்டுவரப்போகின்றார்.விழா அமைப்பாளர்களே, தேவையெனில் உங்களுக்காக நாமே இலங்கை சென்று நீங்கள் 3ம் இடம் கொடுத்தவரின் விபரங்களையும், ஆதாரங்களையும் நாமே கொண்டுவருகின்றோம்.புகைப்படம், வீடியோ முதலியவற்றை உங்களுக்கு காட்டியும் நம்பமறுக்கும் நீங்கள், இலங்கை விதானையின் கையொப்பத்தை எம்மை நம்புமாறு சொல்லுவது எந்தவிதத்தில் நியாயம்.
யாரை திருப்திப்படுத்த இந்த முடிவு, பலவிதமான கதைகள் புகைக்கின்றன.. நெருப்பில்லாமல் புகை வராது. மக்கள் விரைவில் அறிவார்கள்.ஏன் இந்த போட்டி இவ்வளவு உண்மைத்தன்மைகளை பூசி மெழுகி இவ்விழா நடந்தேறக் காரணம் என்ன? பின்னணி என்ன?
இவ்விழா வெற்றிகரமாக நடைபெற அத்துணை மக்களும் விளம்பரதாரர்களும் காட்டிய ஆதரவு அனைவரையும் முகம்சுளிக்க செய்யுமளவிற்கு இவ்விழாவை நடத்தியதன் நோக்கம் என்ன ?
இலங்கையில் இருந்து இந்நிகழ்வுக்கு வர விண்ணப்பித்தவர்கள் எத்தனை? விசா பெற்றவர்கள் எத்தனை? அனைவருமே இவ்விழாவுக்கு தகுதியுடையவர்கள்தானா? அல்லது கனடா விசா பெறுவதற்காக நடத்தப்பட்ட விழாவா? ஆராயப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

நடைபெற்றது Miss tamil universe Canada ? அல்லது Miss &Mrs tamil universe Canada?
Reviewed by Author
on
October 07, 2019
Rating:

No comments:
Post a Comment