க.விஜயகுமாரனின் நதியோரப் பூக்கள் கவிதை நூல் வெளியீட்டு விழாவும் வித்தியா ஜோதி விருது வழங்கும் நிகழ்வும்
மன்னார் கலாநிதி மனோகரக்குருக்கள் நற்பணி மன்றத்தின் வெளியீடாக கணபதிப்பிள்ளை விஜயகுமாரனின் நதியோரப் பூக்கள் கவிதை நூல் வெளியீட்டு விழாவானது 13/10/2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 3-00 மணியளவில் அறநெறிப்பாடசாலைகளின் இணையம் உப்புக்குளம் கேட்போர் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இவநிகழ்விற்கு மன்னார் கலாநிதி மனோகரக்குருக்கள் நற்பணி மன்றத்தின் தலைவர் பிரம்மஸ்ரீ மனோ ஐங்கர சர்மா அவர்களின் தலைமையில்
பிரதமவிருந்தினராக திருமதி.சிவசம்பு கனகாம்பிகை பிரதேச செயலாளர் மன்னார் நகரம் அவர்களும்
சிறப்பு விருந்தினர்களாக
திரு.S..சண்முகலிங்கம் முகாமையாளர் முன்னை நாள் ஆங்கில வள நிலையம்
திரு.S.செல்வரஞ்சன் ஓய்வுநிலை அதிபர் இவர்களுடன் அறநெறிப்பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் சமயப்பெரியோர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்ட நிகழ்வில் நதியோரப் பூக்கள் கவிதை நூல் மதிப்பீட்டுரையினை மன்னார் அமுதன் வழங்க ஆசியுரையோடு வெளியீ செய்யப்பட்து.
சர்மிளா விநோதினி நிகழ்ச்சித்தொகுப்பில் சிறப்பாக நடைபெற்ற நூல்வெளியீட்டு விழாவில் சிறப்பு நிகழ்வாக கல்விச்சேவையாற்றிய திரு.S.சண்முகலிங்கம் திரு.S. செல்வரஞ்சன் இரண்டு அதிபர்களுக்கான அவர்களின் கல்விச்சேவையினையும் கலைச்சேவையினையும் பாராட்டி பொன்னாடை போர்த்தி சந்தன மாலை அணிவித்து வித்தியா ஜோதி எனும் சிறப்பு பட்டம் வழங்கி கௌரவித்தனர.
விருந்தினர்களின் உரையின் சாரம்சமாக கவிதையும் கலையும் தான் மனிதனை சிறப்பான முறையில் வாழ்வதற்கு வழிவகுக்கின்றது. கலையைநேசிக்கும் கலைஞர்கள் தங்களின் திறமையினை வெளிக்கொணர்கின்றனர்.
இயல்பாகவே கலைஞர்களோடு வறுமையும் சேர்ந்துவிடுகின்றது அதனால் அவர்கள் படும் துன்பம் கொஞ்சமல்ல இருந்தாலும் அத்தனை தடைகளையும் தாண்டி தனது கருத்தை சமூகத்திற்கு செல்லமுனைவது சிறப்பான விடையம் தான்
கலை வளரவேண்டும் கலைஞர்கள் வாழவேண்டும்.

க.விஜயகுமாரனின் நதியோரப் பூக்கள் கவிதை நூல் வெளியீட்டு விழாவும் வித்தியா ஜோதி விருது வழங்கும் நிகழ்வும்
Reviewed by Author
on
October 14, 2019
Rating:

No comments:
Post a Comment